இனவாத பேய்களை கண்டு வேட்டியை நனைத்த விமல் வீரவங்ஸ..! மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில், சிங்களம் முதலாமிடத்தில்..

ஆசிரியர் - Editor I
இனவாத பேய்களை கண்டு வேட்டியை நனைத்த விமல் வீரவங்ஸ..! மன்னாரில் தமிழ் மொழி இரண்டாம் இடத்தில், சிங்களம் முதலாமிடத்தில்..

மன்னார் மாவட்டத்தில் அமைச்சர் விமல் வீரவங்ஸ திறந்துவைத்த தும்பு தொழிற்சாலையின் பெயர் ப லகையில் தமிழ் மொழி இரண்டாமிடத்துக்கு தள்ள ப்பட்டிருக்கின்றது.

குறித்த பெயர் பலகையில் தமிழ் மொழி 1ம் இடத்தி ல் இருந்த நிலையில் சிங்கள இனவாதிகளின் கூச் சலினால் இனவாத அமைச்சரின் உத்தரவையடுத்து இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தமிழ் மொழியில் தேசிய கீதம் பாடக்கூடாது என்கிற தர்க்கம் பேசப்பட்டு வரும் நிலையில், மன்னார் மாவட்டத்தில் மேற்படி இந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.

சிறு வணிக அபிவிருத்தி அமைச்சர் விமல் வீரவன்ச கடந்த சனிக்கிழமை மன்னார் மாவட்டத்திற்கு பனந்தும்பு உற்பத்தி நிலையம் ஒன்றை திறந்து வைத்திருந்தார்.

அதில் அரச முயற்சி நிறுவனத்தின் பெயர் முதலில் தமிழிலும் அதற்கடுத்து சிங்களம் மற்றும் ஆங்கிலம் மொழிகளிலும் குறிப்பிடப்பட்டிருந்தது. 

இந்நிலையிலேயே குறித்த பெயர் பலகை தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ளது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு