கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் அடிதடி..! பலா் காயம், காலவரையறையின்றி மூட்டப்பட்டது வளாகம்..

ஆசிரியர் - Editor
கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் அடிதடி..! பலா் காயம், காலவரையறையின்றி மூட்டப்பட்டது வளாகம்..

கிழக்கு பல்கலைக்கழக வந்தாறுமூலை வளாகத்தில் மாணவா்களுக்கிடையில் உருவான மோத லை தொடா்ந்து 1ம் வருட, 2ம் வருட மாணவா்களுக்கான கல்வி நடவடிக்கைகள் காலவரையறை இன்றி மூடப்பட்டிருப்பதாக பல்கலைகழக நிா்வாகம் அறிவித்துள்ளது. 

இந்த தாக்குதலில் இரு முதலாம் வருட மாணவர்கள் படுகாயமடைந்த நிலையில் மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.குறித்த பல்கலைகழக கலைப்பீட முதலாம் ஆண்டு மாணவர்கள் வன்முறையற்ற மாணவர் அமைப்பு என 

பகிடிவதையை இல்லாது ஒழிக்கும் ஒர் அமைப்பை உருவாக்கி செயற்படுத்தி வந்துள்ளனர்.இந்த நிலையில் சம்பவதினமான இன்று பகல் வன்முறையற்ற மாணவர் அமைப்பை ஆரம்பித்த முதவாம் ஆண்டு மாணவர் இருவர் மீது இரண்டாம் ஆண்டு மாணவர்கள் 

குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர்.இந்த தாக்குதலில் படுகாயமடைந்த முதலாம் ஆண்டு இரு மாணவர்கள், வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும் இந்த சம்பவம் காரணமாக பல்கலைக்கழக வளாகத்தில் சில மணிநேரம் 

பதற்ற நிலமை ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Radio