கரும்புலிகள் இலங்கையில் வாழ்கின்றன..! அழிந்துவிட்டதாக கூறப்பட்ட முடிவு மறுதலிக்கப்பட்டது..

ஆசிரியர் - Editor I
கரும்புலிகள் இலங்கையில் வாழ்கின்றன..! அழிந்துவிட்டதாக கூறப்பட்ட முடிவு மறுதலிக்கப்பட்டது..

இலங்கையில் அழிந்துவிட்டதாக அறிவிக்கப்பட்ட கரும்புலிகள் இலங்கை காடுகளில் இப்போதும் இருப்பது விஞ்ஞான ஆய்வுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டிருக்கின்றது. 

சிவனொளிபாதமலையை அண்மித்த ரிக்காடன் வனப்பகுதியில் இந்த கரும்புலிகளின் நடமாட்ட ம் காணப்படுவதாக இலங்கை வனத்துறை அறிவித்திருக்கின்றது. 

ரிக்காடன் வனப்பகுதியில் கண்காணிப்பு கெமராக்களை பொறுத்தி கண்காணிப்பு நடவடிக்கை மேற்கொண்டு வந்தனர். இந்நிலையில் அவ்வாறு பொறுத்தப்பட்ட 

கண்காணிப்பு கெமராக்களில் கரும்புலிகளில் நடமாட்டம் கண்டறியப்பட்டுள்ளதாகவும் இவ்வாறு கண்டறியப்பட்ட கரும் புலியானது 6 அடி நீளமும் 3 அடி உயரமும் கொண்டதாக 

காணப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.மேலும், இக்கரும்புலியை இப்பகுதி மக்கள் நேரில் கண்டுள்ளமையால் பிரதேச மக்கள் அச்சத்தில் இருப்பதாக குறிப்பிட்டனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு