SuperTopAds

நியூயார்க் நகரை சுற்றி 8 இலட்சம் கோடியில் பாதுகாப்பு சுவர்!! -டிரம்ப் கடும் எதிர்ப்பு-

ஆசிரியர் - Editor III
நியூயார்க் நகரை சுற்றி 8 இலட்சம் கோடியில் பாதுகாப்பு சுவர்!! -டிரம்ப் கடும் எதிர்ப்பு-

நியூயார்க் நகரை பாதுகாப்பதற்காக நகரை சுற்றி 8 அரை இலட்சம் கோடி ரூபா செலவில் சுவர் அமைக்க எடுத்த நடவடிக்கையை ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகரை புயல் உள்ளிட்ட பேரழிவில் இருந்து காப்பதற்கு கடல் சுவர் ஒன்றை கட்டும் யோசனையை இராணுவ என்ஜினீயர்கள் கூறி உள்ளனர்.

இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கு 119 பில்லியன் டாலர் (சுமார் ரூ.8 லட்சத்து 33 ஆயிரம் கோடி) செலவாகும். கடல் சுவரை கட்டி முடிப்பதற்கு 25 ஆண்டுகள் ஆகும் என அவர்கள் கணித்துள்ளனர். ஆனால் இந்த திட்டத்துக்கு ஜனாதிபதி டிரம்ப் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் டுவிட்டரில் ஒரு பதிவு வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறி இருப்பதாவது:-

அரிதான புயல்களில் இருந்து நியூயார்க் நகரை காப்பதற்கு 200 பில்லியன் டாலரில் கடல் சுவர் கட்டுவது என்பது அதிக செலவு பிடிக்கிற, முட்டாள்தனமான யோசனை ஆகும். இது சுற்றுச்சூழலுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். இது வேலைக்கு ஆகாது. இது மிகவும் பயங்கரமான திட்டமாகவும் தெரிகிறது. மன்னிக்கவும் என்றுள்ளது.