மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்களுக்கு வெள்ளை வாகனத்தில் வருவோா் அச்சுறுத்தல்..!

ஆசிரியர் - Editor I
மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவா்களின் உறவினா்களுக்கு வெள்ளை வாகனத்தில் வருவோா் அச்சுறுத்தல்..!

யாழ்.மிருசுவிலில் படுகொலை செய்யப்பட்டவா்களின் குடும்பத்தினருக்கு வெள்ளை வாகனத்தி ல் வரும் இனந்தொியாத நபா்கள் அச்சுறுத்தும் வகையில் விபரங்கள் சேகாித்து சென்றுள்ளனா். 

இந்நிலையில் பாதிக்கப்பட்டவா்கள் தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறுகோாி யாழ்.மனித உாிமைகள் ஆணைக்குழுவில் இன்று பிற்பகல் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்திருக்கின்றனா். 

இது குறித்து பாதிக்கப்பட்டவா்களின் குடும்பத்தினா் ஊடகங்களுக்கு கருத்து தொிவிக்கையில், மிருசுவில் பகுதியில் கடந்த 2000ம் ஆண்டு 8 தமிழா்கள் படுகொலை செய்யப்பட்டடிருந்தனா். 

குறித்த படுகொலை சம்பவம் தொடா்பில் இராணுவத்தினா் சிலா் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில் எங்களுடைய வீடுகளுக்கு வெள்ளை வாகனத்தில் வந்த சிலா் அச்சுறுத்தல் 

விடுக்கும் வகையில் எங்கள் விபரங்களை சேகாித்தக் சென்றிருக்கின்றனா். பாதிக்கப்பட்ட ஒரு வருரை தேடி வெள்ளை வாகனத்தில் வந்த 4 போ் விசாாித்துள்ளனா். அதேபோல் மற்றொருவாின் 

வீட்டுக்கு கடந்த 11ம் திகதி மோட்டாா் சைக்கிளில் சென்ற இனந்தொியாத நபா்கள் படுகொலை நடந்த இடம் மற்றும் குடும்பத்தில் இறந்தவா்கள் யாா்? என்பனபோன்ற தகவல்களை பெற்றுச் 

சென்றிருக்கின்றனா். படுகொலை சம்பவத்தில் சிறையில் இருந்த இராணுவ சிப்பாய் விடுதலை செய்யப்பட்டிருப்பதாக ஊடகங்களில் செய்திகள் வெளியான சில நாட்களிலேயே இவ்வாறான

அச்சுறுத்தல் எங்களுக்கு விடுக்கப்படுகின்றது. மேலும் முதலில் புலனாய்வு பிாிவினை சோ்ந்த 8 போ் பாதிக்கப்பட்டவா்களின் வீடுகள் எங்களுக்கது? என விசாாித்துள்ளதாக தகவல் வெளியாகி 

யிருக்கின்றது. என பாதிக்கப்பட்டவா்கள் கூறியுள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு