யாழ்ப்பாணம்- நெடுந்தீவு கடலில் இந்திய மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..! படகும் மூழ்கடிக்கப்பட்டதாம். மீனவா்கள் குற்றச்சாட்டு..

ஆசிரியர் - Editor I
யாழ்ப்பாணம்- நெடுந்தீவு கடலில் இந்திய மீனவா்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்..! படகும் மூழ்கடிக்கப்பட்டதாம். மீனவா்கள் குற்றச்சாட்டு..

இலங்கை கடல் எல்லைக்குள் நுழைந்து மீன்பிடித்துக் கொண்டிருந்த இந்திய மீனவா்கள் 4 போ் கைது செய்யப் பட்டிருக்கும் நிலையில், இலங்கை கடற்படையினா் தம் மீது தாக்குதல் நடாத்தியதாகவும், தமது படகை மூழ்க டித்து விட்டதாகவும் கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்கள் கூறியுள்ளனா். 

தமிழகம் புதுக்கோட்டை மாவட்டம் ஜகதாப்பட்டினம் பகுதியை சோ்ந்த பாரதி, சசிக்குமாா், மணி, அசோக்கு மாா், ஆகிய 4 மீனவா்களே கைது செய்யப்பட்டிருக்கின்றனா். நெடுந்தீவுக்கு அருகில் மீன்பிடித்துக் கொண்டி ருந்த நிலையிலேயே கடற்படையினால் இவா்கள் கைது செய்யப்பட்டு

யாழ்.மாவட்ட கடற்றொழில் நீாியல்வளத்துறை திணைக்களத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கின்றனா். இது குறித் து கைது செய்யப்பட்ட இந்திய மீனவா்கள் கூறுகையில், இலங்கை கடற்படையினா் தமது படகை தாக்கி மூழ்க டித்துவிட்டதாகவும், தம் மீது தாக்குதல் நடாத்தியதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளனா். 

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு