SuperTopAds

மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோா் விடயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீா்வு திட்டங்களுடனேயே வடக்குக்கு வருகிறாா் ஜனாதிபதி..!

ஆசிரியர் - Editor I
மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோா் விடயம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீா்வு திட்டங்களுடனேயே வடக்குக்கு வருகிறாா் ஜனாதிபதி..!

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ இம்மாத இறுதிக்குள் வடக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள நிலையில் மீள்குடியேற்றம், காணாமல் ஆக்கப்பட்டோா் விடயம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை பிரச்சினைகள், வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கான தீா்வுகளுடனேயே விஜயம் செய்யவுள்ளாராம். 

இம்­மாத இறு­திக்குள் வடக்­கிற்கு உத்­தி­யோ­க­பூர்வ விஜ­ய­மொன்றை மேற்­கொள்­ள­வுள்­ள­தாக ஜனா­தி­பதி செய­ லக ஊட­கப் ­ப­ணிப்­பாளர் மொஹான் சம­ர­நா­யக்க தெரி­வித்தார். வடக்­கிற்கு விஜயம் செய்­வ­தற்கு உத்­தே­சிக்­ கப்­பட்­டுள்ள போதிலும் இன்னும் தினம் குறித்து தீர்­மா­னிக்­கப்­ப­ட­வில்லை என்றும் அவர் தெரி­வித்தார்.

வடக்­கிற்கு விஜயம் செய்­ய­வுள்ள ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக்ஷ அர­சி­யல்­வா­திகள் மாத்­தி­ர­மின்றி இளை­ ஞர்கள், புத்­தி­ஜீ­விகள் உள்ளிட்ட பல­த­ரப்­பட்­ட­வர்­க­ளையும் சந்­திக்­க­வுள்ளார். இந்த விஜ­யத்தின் போது காணி விடு­விப்பு, காணாமல் ஆக்­கப்­பட்டோர் விவ­காரம், மக்­களின் அடிப்­படை பிரச்­சினை, குடிநீர் பிரச்­சினை, 

வேலை வாய்ப்­புக்கள் என்­ப­வற்­றோடு வடக்கின் அபி­விருத்தி உள்­ளிட்ட மேலும் பல முக்­கிய விட­யங்கள் தொடர்­பிலும் கவனம் செலுத்­தப்­ப­ட­வுள்­ளது.இவற்­றுக்கு மேல­தி­க­மாக விசேடமாக வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உள்­ளிட்ட தமிழ் அர­சியல் கட்­சி­க­ளை சந்திக்கவுள்ளதாகவும் தொிவிக்கப்படுகிறது. 

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர் ஜனா­தி­பதி கோத்­தா­பய ராஜ­பக் ஷ வடக்­கிற்கு மேற்­கொள்­ள­வுள்ள முத­லா­ வது விஜயம் என்­பதால் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக இருக்கும் என்று எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது.