வாங்கிய A/C (குளிரூட்டி) களுக்கு பல மாதங்கள் லீசிங் கட்டவில்லை..! தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு லீசிங் நிறுவனம் எச்சரிக்கை..
தெல்லிப்பளை வைத்தியசாலையில் தவணை கொ டுப்பனவு முறையில் குளிரூட்டி (ஏசி) வாங்கிய வைத்தியசாலை நிர்வாகம் கடந்த பல மாதங்களாக தவணை கொடுப்பனவை வழங்காத நிலையில் குளிரூட்டி வழங்கிய நிறுவனம் குளிரூட்டிகளை மீள ஒப்படைக்குமாறு வைத்தியசாலை நிர்வாகத்திடம் கூறியுள்ளது.
தெல்லிப்பளை வைத்தியசாலையின் ஓரு பகுதிக்கு அண்மையில் பொருத்திய குளிரூட்டிகளிற்கான கொடுப்பனவு தொடர்பிலேயே மேற்படி சர்ச்சை நிலவுகின்றது. இதேநேரம் தமக்கான கொடுப்பனவை செலுத்தினால் நெருக்கடியினை தீர்க்க முடியும்.
அல்லது குளிரூட்டிகள் மீள வழங்கப்பட்டே ஆக வேண்டும் என நிறுவனம் விடாப்பிடியாகவுள்ளது. இந்நிலையில் இது தொடர்பில் வைத்தியசாலை தரப்பின் தகவல்களின் அடிப்படையில.
இது நிர்வாக ரீதியிலான கொள்வனவுகள் அல்ல இருப்பினும் வளாகத்தில் பொருத்தினால் அவை அரச சொத்தாகவே கருதப்படும் இதனை அகற்றுவதானால் உரிய விதிமுறைகள் பின்பற்றப்பட வேண்டும் என்கின்றனர்.