கிளிநொச்சி- விநாயகர்புரம் கிராமத்தில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி..! பொலிஸார் கண்டு கொள்வதில்லை. மக்கள் போராட்டம்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி- விநாயகர்புரம் கிராமத்தில் பகிரங்கமாக நடத்தப்படும் விபச்சார விடுதி..! பொலிஸார் கண்டு கொள்வதில்லை. மக்கள் போராட்டம்..

கிளிநொச்சி- விநாயகர்புரம் பகுதியில் இடம்பெற்று வரும் விபச்சார விடுதியை அகற்றி விபச்சார விடுதி நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்ககோரி பொதும க்கள் கவனயீர்ப்பு போராட்டம் நடாத்தியுள்ளனர்.

அப்பகுதியில் தனிநபர் ஒருவர் பிற பிரதேசங்களி லிருந்து பெண்களை அழைத்து வந்து விடுதி ஒன்றை நடார்த்தி வருவதாகவு்ம. இதனால் தமது கிராமத்திற்கு அவப்பெயர் காணப்படுவதாகவும் மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதனால் கிராமத்தில் உள்ள இளைஞர்களிற் கிடையிலும், வேறு பிரதேசங்களிலி் இருந்து வரும் நபர்களிற்கிடையிலும் தொடர்ந்து முறுகல் நிலை காணப்படுவதாகவு்ம, 

பிரதேச இளைஞர்கள் குறித்த செயற்பாட்டை தடுப்பதற்கான பல முயற்சிகளை மேற்கொண்ட போதிலும் தொடர்ச்சியாக அவ்விடயம் முன்னெடுத்து செல்லப்படுவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதனால் எதிர்காலத்தில் மோசமான விளைவுகள் ஏற்படக்கூடிய நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கும் மக்கள், குறித்த சமூக சீரழிவிற்கு 15 வயதிற்கு குறை்த சிறுவர்களும் செல்வதை அவதானித்துள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். 

மேலு்ம, தமது பிள்ளைகளின் திருமணம் மற்றும் ஏனைய நல்ல விடயங்களை மேற்கொள்வதற்கு குறித்த சமூக விரோத செயல் பெரும் தடையாக காணப்படுவதாகவும், கிராமத்தில் மணம் முடித்தல், 

காணிகளை வாங்க விரும்புவோர் கிராமத்தின் பெயரை கேட்டு விலகி செல்வதாகவும் தெரிவிக்கின்றனர். குறித்த செயற்பாட்டினால் ஒட்டுமொ்ததமாக அப்பிரதேச மக்கள் பாதிக்கப்புடுவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

குறித்த சமூக விரோத செயற்பாட்டினை கட்டுப்படுத்த கோரியு்ம, நற்பெயரை இழ்து நிற்கும் தமது கிராமத்திற்கு நல்மதிப்பினை ஏற்படுத்தி தருமாறு கோரியும் குறித்த போராட்டத்தை அப்பகுதி மக்கள் இன்று முன்னெடுத்தனர். 

இவ்விடயம் தொடர்பில் அதிகாரிகள், பொலிசார் கவனம் செலுத்தி நடவடிக்கை மேற்கொண்டு கிராமத்தின் நற்பெயரை மீள பெற்றுத்தர நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.


.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு