SuperTopAds

மகள் மீது பாலியல் கொடுமை!! -வழக்கை மீறப்பெற மறுத்த தாய் வெட்டி படுகொலை-

ஆசிரியர் - Editor III
மகள் மீது பாலியல் கொடுமை!! -வழக்கை மீறப்பெற மறுத்த தாய் வெட்டி படுகொலை-

உத்தரபிரதேசம் கான்பூரைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவரின்  13 வயது  மகளை பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டில் 2018 ஆம் ஆண்டில் சாந்த் பாபு, மிந்து, ஜமீல், மஹ்பூப், ஆபித் மற்றும் ஃபிரோஸ் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர். 

நீதிமன்றத்தில் அவர்கள் முற்படுத்தப்பட்ட போது அவர்களுக்கான பிணை அனுமதி வழங்கப்பட்டது. 

கடந்த வியாழக்கிழமை இந்த 6 பேரும்  அந்தப் பெண் மற்றும் அவரது மகளின் வீட்டிற்குள் நுழைந்து தங்கள் மீதான கிரிமினல் வழக்கைத் திரும்பப் பெறும்படி கட்டாயப்படுத்தினர். மறுத்த தாய் மற்றும் மகளையும் அந்த கும்பல் தாக்கி உள்ளது.

பலத்த காயமடைந்த அந்தப் பெண்ணும் சிறுமியும்  கான்பூரில் உள்ள  மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இத்தாக்குதலில் பாஜகவின் உள்ளூர் தலைவியான அவருடைய சகோதரியும் படுகாயம் அடைந்தார். இந்நிலையில் நேற்று சிகிச்சை பலனளிக்காமல் சிறுமியின் தாய் உயிரிழந்தார். குற்றவாளிகள் 3 பேரை மீண்டும் கைது செய்த போலீசார் தப்பியோடிய ஒருவனைத் தேடி வருகின்றனர்.