சிரியாவில் தொடரும் கடும் போர்!! -ஒரு நாளில் 39 பேர் சாவு-

ஆசிரியர் - Editor III
சிரியாவில் தொடரும் கடும் போர்!! -ஒரு நாளில் 39 பேர் சாவு-

சிரியாவில் அதிபரின் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சிப் படைகளுக்கும் நடந்த கடும் சண்டையில் ஒரே நாளில் மட்டும் 39 பேர் உயிரிழந்தனர்.

சிரியாவில் கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் 15 ஆம் ஆண்டில் இருந்து தொடர்ந்து போர் நடந்து வருகின்றது. போர் நிறுத்தம் செய்யப்பட்ட போதும் அதனையும் மீறியும் போர் தொடர்ந்து வண்ணமே உள்ளது. 

உள்நாட்டுப்போர் முடிவுக்கு வர வேண்டுமானால் கிளர்ச்சியாளர்கள் வசமுள்ள இத்லிப் மாகாணத்தை அவர்களின் பிடியில் இருந்து விடுவித்தாக வேண்டும் என்பது சிரியாவின் அதிபர் பஷார் அல் ஆசாத்தின் உறுதியான கருத்தாக உள்ளது.

இந்த நிலையில் சிரியாவில் கடைசியாக ரஷியா, துருக்கி ஆகிய நாடுகள் மேற்கொண்ட சமரச முயற்சிக்கு பின்னர் கடந்த 12-ந் தேதி சண்டை நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.

ஆனால் இந்த ஒப்பந்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், நேற்று முன்தினம் அங்கு இத்லிப் மாகாணத்தின் மாரெட் அல் நுமான் நகர பகுதிகளில் அதிபர் ஆதரவு படைகளுக்கும், கிளர்ச்சியாளர்கள் படைகளுக்கும் இடையே கடும் சண்டை நடந்தது.


இந்த சண்டையில் ஒரே நாளில் மட்டும் இரு தரப்பிலும் சேர்த்து 39 பேர் பலியாகினர்.

கிளர்ச்சியாளர்கள் படையில் 22 பேரும், அதிபர் ஆதரவு படையில் 17 பேரும் பலியானதாக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியது.

இதற்கிடையே இத்லிப் நகரத்தில் போர் விமானங்கள் பறந்து குண்டு மழை பொழிந்தன. இந்த தாக்குதலில் அங்குள்ள சந்தை சிக்கியது. குண்டு மழையில் கடைகள், கார்கள் எரிந்தன. அப்பாவி மக்கள் 18 பேர் பலியாகினர்.

இந்த வான்தாக்குதலை ரஷியா மற்றும் சிரியா போர் விமானங்கள் நடத்தியதாக இங்கிலாந்தை தலைமையகமாக கொண்டு செயல்படுகிற சிரியா மனித உரிமைகளுக்கான கண்காணிப்பு அமைப்பு கூறியது.

இத்லிப் மாகாணத்தில் சண்டை வலுத்து வருகிற நிலையில், அங்கு வசித்து வந்த மக்கள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள ஊரை காலி செய்து விட்டு இடம் பெயர்ந்து வருகின்றனர்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு