போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் வான் தாக்குதல்!! -குழந்தைகள் உட்பட 18 பேர் சாவு-

ஆசிரியர் - Editor III
போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி சிரியாவில் வான் தாக்குதல்!! -குழந்தைகள் உட்பட 18 பேர் சாவு-

சிரியா இட்லிப் பகுதியில் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி நடத்தப்பட்ட வான்தாக்குதலில் 18 பொதுமக்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

ரஷ்ய மற்றும் சிரிய படையினரின் விமானங்களே இவ்வாறு தாக்குதல் நடாத்தியுள்ளதாக கூறப்படுகின்றது.

இட்லிப் நகரத்தின் அல்-ஹால் சந்தை மற்றும் தொழில்துறை பகுதியில் வான்வழி குண்டு தாக்குதல் இடபெற்றுள்ளமையை இங்கிலாந்தை தளமாகக் கொண்ட சிரிய மனித உரிமைகளுக்கான ஆய்வகம் (எஸ்.ஓ.எச்.ஆர்) உறுதிசெய்துள்ளது.

உயிரிழந்தவர்களில் குழந்தைகள் மற்றும் மீட்புப் பணியாளர்கள் அடங்குவதாக குறித்த ஆய்வகம் மேலும் தகவல் வெளியிட்டுள்ளது. 

அண்மையில் மேற்கொள்ளப்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தினை மீறும் வகையிலேயே இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு