பயங்கரவாதிகளுக்கு நீதி கொடுக்கும் பல நாடுகள் -தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார் இந்திய தளபதி-

ஆசிரியர் - Editor II
பயங்கரவாதிகளுக்கு நீதி கொடுக்கும் பல நாடுகள் -தனிமைப்படுத்த வேண்டும் என்கிறார் இந்திய தளபதி-

பயங்கரவாதத்திற்கு நிதியளிக்கும் நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதம் தொடரும் என இந்தியாவின் முப்படை தளபதி ஜெனரல் பிபின் ராவத் தெரிவித்தார்.

டெல்லியில் நடந்த ரைசினா 2020  உரையாடல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்:-

பயங்கரவாதத்திற்கு நிதி கொடுக்கும்  நாடுகள் இருக்கும் வரை பயங்கரவாதம் தொடரும். இதுபோன்ற நாடுகளை சர்வதேச சமூகம் தனிமைப்படுத்த வேண்டும்.

பயங்கரவாதத்திற்கு நிதியுதவி செய்யும் நாடுகள் இருக்கும் வரை அவர்கள்  பயங்கரவாதத்தை அங்கு வைத்திருப்பார்கள். அவர்கள் பயங்கரவாதிகளை பிரதிநிதிகளாகப் பயன்படுதுவார்கள். 

இதனால் பயங்கரவாதிகளுக்கு இலகுவில் ஆயுதங்கள் கிடைக்கின்றது. இவ்வாறு வளரும் பயங்கரவாதத்தை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது என்றார். 

Radio
×