உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை கைபேசியில் பதிவு செய்த நபரை கைது செய்த இரான்!

ஆசிரியர் - Admin
உக்ரைன் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதை கைபேசியில் பதிவு செய்த நபரை கைது செய்த இரான்!

உக்ரைன் பயணிகள் விமானம் ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்படுவதை காணொளி எடுத்த நபரை கைது செய்துள்ளதாக இரான் தெரிவித்துள்ளது. கைது செய்யப்பட்ட அந்த நபர் மீது தேச பாதுகாப்பு குறித்த குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. 

இது தொடர்பாக அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட உள்ளது. காணொளி எடுத்த நபரை இரானின் புரட்சிகர ராணுவபடையினர் காவலில் எடுத்துள்ளனர். 

ஆனால், காணொளியை முதலில் பதிவிட்ட லண்டனில் இருக்கும் இரான் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர், தமக்கு அந்த காணொளியை அனுப்பிய நபர் பாதுகாப்பாக இருப்பதாகவும், இரான் அதிகாரிகள் தவறான நபரை கைது செய்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

கடந்த புதன்கிழமை அன்று டெஹ்ரானில் இருந்து புறப்பட்ட PS752 என்ற விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதில் அதில் இருந்த 176 உயிரிழந்தனர். தவறுதலாக பயணிகள் விமானம் சுடப்பட்டதாக கூறிய இரான் இந்த சம்பவம் தொடர்பாக பலரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. 

சிறப்பு நீதிமன்றம் இந்த விசாரணையை கண்காணிக்கும். இது ஒரு சாதாரண வழக்காக இருக்காது. ஒட்டு மொத்த உலகமும் இந்த விசாரணையை கவனிக்கும் என்று இரான் நாட்டின் அதிபர் ஹசன் ரூஹானி கூறியிருக்கிறார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு