கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

ஈரான் விமான விபத்து: மரணிக்கும் முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கனடிய இளம்தாய் மற்றும் 8 வயது மகள்! - உருக்கமான பதிவு.

ஆசிரியர் - Admin
ஈரான் விமான விபத்து: மரணிக்கும் முன் புகைப்படம் எடுத்துக்கொண்ட கனடிய இளம்தாய் மற்றும் 8 வயது மகள்! - உருக்கமான பதிவு.

விமான விபத்தில் உ யிரிழந்த கனடாவை சேர்ந்த தாய் மற்றும் மகளின் புகைப்படங்கள் வெளியாகியுள்ளதோடு அவர்களின் பின்னணி மனதை உருக்கியுள்ளது. ஈரானில் நடந்த விமான விபத்தில் விமானத்தில் இருந்த 176 பயணிகளும் உயிரிழந்தனர். இதில் 63 கனடியர்களும் அடக்கும். இந்நிலையில் ரொரன்ரோவை சேர்ந்த இளம் தாயும், அவரின் 8 வயது மகளும் இந்த விமான விபத்தில் ப ரிதாபமாக இ றந்தது தெரியவந்துள்ளது. 

இது தொடர்பான தகவலை பெண் பத்திரிக்கையாளரான Caryn Lieberman தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் Sahar Haghjoo என்ற பெண்ணும் அவர் மகளான Elsa Jadidi ஆகிய இருவரும் குறித்த விமானத்தில் ஏறியுள்ளனர். விமான கிளம்புவதற்கு சில நிமிடங்களுக்கு முன்னர் இருவரும் செல்பி புகைப்படம் எடுத்து கொண்டனர் என குறிப்பிட்டுள்ளார்.

எனக்கு Sahar Haghjoo-ஐ நன்கு தெரியும் எனவும் ஒருமுறை அவரை பேட்டி எடுத்ததாகவும் Caryn கூறியுள்ளார். Sahar-ன் குடும்பத்தார் ஈரானில் இருப்பதால் அவர் தனது கணவர் மற்றும் மகளுடன் அங்கு சென்றிருக்கிறார். ஆனால் Sahar-ன் கணவர் தனது பணி இருப்பதால் ஒரு வாரத்துக்கு முன்னரே ரொரன்ரோவுக்கு திரும்பியுள்ளார்.

ஆனால் ஈரானில் உள்ள குடும்பத்தாருடன் Sahar மற்றும் அவர் மகள் Elsa தங்கியிருந்து நேற்று முன் தினம் கிளம்பிய நிலையிலேயே விமான விபத்தில் சிக்கியுள்ளனர். தொலைக்காட்சியில் தொகுப்பாளினியாக இருந்த Sahar புலம்பெயர்பவர்கள் மற்றும் அகதி பெண்களுக்கு உதவியாக பல்வேறு விடயங்களை செய்துள்ளார். அவரின் எட்டு வயது மகள் Elsa பள்ளிப்படிப்பில் மிகவும் கெட்டிகாரியாக இருந்துள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Radio
×