கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மனித தவறுகளாலேயே உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாம்..! 180 மனிதர்களின் உயிரிழப்பை சாதாரணமாக கூறிய ஈரான்.

ஆசிரியர் - Editor
மனித தவறுகளாலேயே உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாம்..! 180 மனிதர்களின் உயிரிழப்பை சாதாரணமாக கூறிய ஈரான்.

ஈரான் நாட்டிலிருந்து உக்ரைன் நாட்டுக்கு பயணமான உக்ரைன் நாட்டு விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் மனித தவறுகளால் இடம்பெற்றதாக ஈரான் அறிவித்துள்ளது.

ஈரான் அரசு தொலைக்காட்சியில் வெளியான செய்தியில்,  பதற்றம் நிறைந்த ராணுவ பகுதி அருகே உக்ரைன் விமானம்  பறந்து கொண்டிருந்ததாகவும், மனித தவறுகளினால் இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அந்த விமானத்தில் 9 விமானப் பணியாளா்கள் உள்பட 176 பேர் பயணித்த நிலையில் அனைவரும் உயிரிழந்துள்ளனர். 82 ஈரானியா்கள், 63 கனடா நாட்டவா்கள், 10 சுவீடன் நாட்டவா்கள், 4 ஆப்கானியா்கள், 3 ஜொ்மானியா்கள் 11 உக்ரைன் நாட்டவா்களும் அந்த விமானத்தில் இருந்தனா்.  

இதில்  15 போ் சிறுவா்கள். டெஹ்ரானின் ஷெரீஃப் பல்கலைக்கழக மாணவா்கள் 13 போ் விபத்தில் உயிரிழந்தவா்களில் அடங்குவா் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்பு  தொழில் நுட்ப கோளாறு காரணமாக இன்ஜின் தீப்பிடித்ததால் விபத்து நடந்தாக ஈரான் கூறியது.

Radio
×