கசீம் சுலைமானி யார்? அவருக்கும் எப்படி பெரும் ஆதரவு?..
62 சமர்க்களங்களை பாத்திருக்கார் மனிசன்.இஸ்ரேல் எப்டி தனிச்சிருக்கோ,அதேபோல மற்ற அரபு நாடுகளுக்கு நடுவில தனிச்சிருக்கிற தேசம் ஈரான்.41 வருசம் தாய் நாட்டுக்காகவே இயங்கி இருக்கார்.
இஸ்ரேல்,சன்னி முஸ்லிம்கள்,குர்திஷ் பிரச்சினை,அமெரிக்கா என பலமுனைகளில் குறிவைக்கப்படும் ஈரானை தனது இராணுவ நுட்பத்தால் காப்பாற்றிய மனிசன்.மூன்று நாள் துக்கம் அனுட்டிப்பில் ஈரானே கண்ணீர் விட்டு அழுகிறது.
விழுப்புண் பட்டு கிடந்த வேளையிலும் கள நிலவரம் தடுமாறுகிறது என்றதும் எழுந்து போர்க்களத்துக்கு போனவர்.மொசாட் போலவே ஈரானுக்கு எதிரான சக்திகளை எல்லை கடந்து போட்டுத்தள்ளும் இரகசிய அமைப்பின் தலைவர்.
தான் இறந்தால் தனக்காக எந்தவித விசேட அலுவலும் செய்யக்கூடாதென முன்னரே அறிவித்ததால் ஒரு விவசாயியின் மகனா கசீம் சுலைமானியை அவரது கிராமத்தில் அடக்கம் செய்ய கொண்டு போனதில் திரண்ட மக்கள் கூட்ட நெரிசலில் சிக்கியே நாற்பது பேர் இறந்திருக்கிறார்கள்.