கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

மார்ச் 7 கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - 9 ஆயிரம் பேர் கூடுவர்!

ஆசிரியர் - Admin
மார்ச் 7 கச்சத்தீவு புனித அந்தோனியார் திருவிழா - 9 ஆயிரம் பேர் கூடுவர்!

கச்சத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத் திருவிழாவில் இம்முறை இலங்கை, இந்தியாவில் இருந்து சுமார் 9 ஆயிரம் பேர் பங்குகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதாக, யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளர் என்.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்தில், இன்று நடைபெற்ற கச்சத்தீவு திருவிழா ஏற்பாடுகள் சம்பந்தமான கலந்துரையாடலின் போதே, அவர் இவ்வாறு தெரிவித்தார்.

கச்சத்தீவு தேலயத்தின் வருடாந்த திருவிழா மார்ச் மாதம் 7ஆம் திகதியன்று நடைபெறவுள்ளது. இந்த திருவிழாவுக்குக் கடற்படையினரின் உதவி இன்றியமையாததாகும். 

இதற்கமைய, திருவிழாவுக்கு முதல் நாளான 6ஆம் திகதி அதிகாலை 5 மணியில் இருந்து மதியம் 11 மணி வரைக்கும், யாழ்ப்பாணத்தில் இருந்து குறிகாட்டுவான் வரை பஸ் போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அன்று காலை 6 மணியில் இருந்து நண்பகல் 12 மணி வரைக்கும் குறிகாட்டுவானில் இருந்து கச்சத்தீவு நோக்கிய படகு சேவையும் நடைபெறும்.

இம்முறையும் கச்சத்தீவில் பொலித்தீன் பாவனை முற்றாகத் தடைசெய்யப்பட்டுள்ளதாகவும், அவர் கூறினார்.

Radio
×