இந்தோனேஷிய வெள்ள பெருக்கில் 66 போ் உயிாிழந்த சோகம்..!
இந்தோனேஷியா- ஜகா்த்தா பகுதியல் கனமழையினால் பெரும் வெள்ள பெருக்கில் சிக்கிய 66 போ் உயிாிழந்துள்ளதாக அந்நாட்டு செய்திகள் தொிவிக்கின்றன.
அத்துடன் இந்த அனர்த்தம் காரணமாக இருவர் காணாமல்போயுள்ளதுடன், ஆயிரக் கணக்கானோர் தங்களது வீடுகளிலிருந்து வெளியேறியிமுள்ளனர்.
இவர்களில் 173,000 க்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். ஜகர்த்தாவில் புத்தாண்டு ஆரம்த்ததிலிருந்து பலத்த மழை பெய்து வருகின்றது.
இதன் காரணமாக வெள்ளம் மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு அப் பகுதி மக்கள் பெரிதும் முகங்கொடுத்துள்ளனர். மழை சற்று தனிந்துள்ள காரணத்தினால்
வெள்ளம் வடிந்தோட ஆரம்பித்துள்ளது. எனினும் ஜகர்த்தா மற்றும் இந்தோனேஷியாவில் அதிக மக்கள் தொகையை கொண்டுள்ள ஜவாவின் மையப் பகுதியில் அடுத்த நான்கு நாட்களுக்கு
102 மில்லி மீற்றர் வரை மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என அந் நாட்டு வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
இதனால் அப் பகுதிகளில் மீண்டும் அனர்த்தம் ஏற்படலாம் என அந் நாட்டு அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளது.இதனிடையே வெள்ளத்தினால் ஏற்படக்கூடிய நோய்களை தடுப்பதற்காக
அந் நாட்டு அதிகாரிகளுடன் இணைந்து சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தினர் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்னர்.