'இளைஞர்கள் கேள்வி கேட்பது சிறப்பான செயல்' - பிரதமர் மோடி!

ஆசிரியர் - Admin
'இளைஞர்கள் கேள்வி கேட்பது சிறப்பான செயல்' - பிரதமர் மோடி!

பிரதமர் நரேந்திர மோடி ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக் கிழமையில் அகில இந்திய வானொலி வழியே “மன் கி பாத்”(மனதின் குரல்) என்ற நிகழ்ச்சியில் பொதுமக்களிடையே பேசி வருகிறார். அதன்படி இன்று அவர் பேசிய 60 வது உரை இந்த ஆண்டின் கடைசி உரையாகும். 

இன்றையை நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பேசியதாவது;- “அடுத்த பத்து ஆண்டுகளில் நவீன இந்தியாவை கட்டமைப்பதில் இளைய தலைமுறையினர் முக்கிய பங்கு வகிப்பார்கள். நமது இளைஞர்கள் அராஜகம், நிலையற்ற தன்மை மற்றும் குழப்பம் ஆகியவற்றை வெறுக்கிறார்கள். மேலும் சாதி, அதிகார வர்க்கத்தின் ஒடுக்குமுறை ஆகியவற்றை அவர்கள் விரும்புவதில்லை.     

அரசியலமைப்பு மீது இந்திய இளைஞர்களின் மிகுந்த நம்பிக்கை கொண்டுள்ளனர். அமைப்பு முறை சரியில்லை என்றால் இளைஞர்கள் துணிச்சலாக கேள்வி கேட்கிறார்கள். இதை நான் மிகவும் சிறப்பானதாக பார்க்கிறேன். இந்தியாவின் இளைய தலைமுறையினர் ஒரு புதிய செயல் திட்டம் மற்றும் ஒழுங்கின் உருவகமாக இருந்து, நமது நாட்டை உயர்ந்த நிலைக்கு எடுத்துச் செல்வார்கள்.

ஒரு புதிய இந்தியாவை இளைஞர்கள் உருவாக்கி வருகின்றனர். 2020ம் ஆண்டில் நாம் மீண்டும் சந்திபோம். புத்தாண்டு, புதிய சகாப்தம், புதிய சக்தி, புத்துணர்ச்சி ஆகியவற்றைக் கொண்டு நம்முடைய தீர்மானங்களை நிறைவேற்றுவோம்” என்று அவர் கூறியுள்ளார்.