மூத்த ஊடகவியலாளா் கே.ரீ.இராஜசிங்கம் வடக்கு ஆளுநா். பொது அமைப்புக்கள் ஜனாதிபதிக்கு கடிதம்.

ஆசிரியர் - Editor I

வடக்கு மாகாண ஆளுநராக கே.ரீ இராசசிங்கம் நியமிக்கப்படலாம் என மக்களால் எதிர்பார்க்கபட்ட நிலையில் வடமாகாணத்தில் உள்ள பல்வேறு அமைப்புக்கள் அவரை ஆளுநராக நியமிக்குமாறு ஜனாதிபதி கோத்தபய ராஜபக்சவுக்கு கோரிக்கைகள் விடுத்துள்ளதாக அறிய முடிகின்றது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உடுப்பிட்டி தொகுதி அமைப்பாளராக 1970கள் தொடக்கம் சேவையாற்றிய கே.ரீ.இராஜசிங்கம் பின்னா் சுவிஸ் நாட்டுக்கு சென்று வாழ்ந்து வருகின்றபோதும் வடக்கில் தங்கியிருந்து ஊடக பணியாற்றி வருகின்றாா். 60 வருடங்களுக்கு மேலாக ஊடக அனுபவமிக்க,

இவா் தற்போதும் அந்த துறை ஊடாக சேவையாற்றிவரும் நிலையிலேயே அவா் ஆளுநராக நியமிக்கப்படலாம். எனவும், அவரை ஆளுநராக நியமிக்குமாறும் வடமாகாணத்தில் உள்ள பல்வேறு பொது அமைப்புக்கள் ஜனாதிபதியிடம் கோாிக்கை விடுத்துள்ளன. ஆளுநா் நியமன பேச்சுக்களுக்கு முன்னா்,

கே.ரி.இராசசிங்கம் கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் கவனத்திற்கு ஓர் முக்கிய விடயத்தை கொண்டு சென்றுள்ளாா். அதாவது வட பகுதி மக்கள் அனைவரையும் ஒருமித்து அனைத்து கொள்ளும் நீர்பாசன திட்டத்தை குறித்து குறிப்பிட்டிருக்கின்றாா். வடக்கு மாகாணத்தில் யாழ். குடா வரையும் மேரக்கந்த நீர்தேக்க நீரை 

அனுராதபுரத்தில் இருந்து மதவாச்சி ஊடாக வவுனியா வந்து வடமேற்கு பகுதியான முருங்கனில் உள்ள கட்டுக்கரை குளத்திற்கும் மற்றும் துணுக்காயில் உள்ள வவுனிக்குளத்திற்கும் மேலும் அங்கிருந்து வடக்கு நோக்கி சென்று கிளிநொச்சியில் உள்ள இரணைமடு குளம் வரை எடுத்து வந்து அங்கிருந்து ஆணையிரவில் ஒரு பாரிய சுரங்கத்தின் மூலம் யாழ் குடா நாட்டில் புதிதாக அமைக்கப்பட வேண்டிய யாழ் நன்நீர் வாவி வரை கொண்டு வந்து யாழ் குடா நாட்டையும் ஒரு வளமான நாடாக மாற்ற வேண்டும் என வேண்டுகோள் அதுவாகும். 

மேலும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷவுடனும் அவருடைய குடும்பத்தினருடனும் நெருக்கமான உறவை கொண்டிருந்தவர் என்பதுடன், வடக்கில் உள்ள சிவில் அமைப்புக்கள், பொது அமைப்புக்களுடன் நெருக்கமான உறவை பேணியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Thanks Video: Thamillanka.com

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு