கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

ஆசிரியர் - Admin
அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு அவதூறு வழக்கு

அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக சீமான் மீது தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு எதிராக தமிழக அரசு சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கடந்த செப்டம்பர் மாதம் 14-ம் தேதி பேட்டியளித்த சீமான், அரசையும், முதல்வரையும் விமர்சித்துப் பேசியதாக அவதூறு வழக்கு தொடரப்பட்டு உள்ளது.

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கு விரைவில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் சீமானை தண்டிக்க வேண்டும் என மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

Radio
×