புதுடெல்லியில் ஜனாதிபதி கோத்தாவுக்கு வரவேற்பு!

ஆசிரியர் - Admin
புதுடெல்லியில் ஜனாதிபதி கோத்தாவுக்கு வரவேற்பு!

இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இரண்டு நாட்கள் உத்தியோகப்பூர்வ பயணமாக இன்று மாலை இந்தியா சென்றடைந்தார். புதுடெல்லி விமான நிலையம் வந்தடைந்த ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவை இந்திய அமைச்சர் வி.கே.சிங் வரவேற்றார்.

ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் உள்ளிட்டோரை தனித்தனியாக சந்தித்து இருநாடுகளுக்கு இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்தவுள்ளார்.


Ads
Radio
×