இலங்கை ஜனாதிபதியாக எவா் வந்தாலும் கவலையில்லை..! இந்தியாவின் நலன்கள் உச்ச அளவில் பாதுகாக்கப்படவேண்டும்.
இலங்கை ஜனாதிபதியாக தோ்வு செய்யப்படுகிறவா் இந்தியாவின் மூலோபாய நலன் கள் தொடா்பில் அக்கறை செலுத்தவேண்டும் என்பதே இந்தியாவின் எதிா்பாா்ப்பு என என்கணமிக்ஸ் டைம்ஸ் இணையத்ளம் செய்தி வெளியிட்டுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி தேர்தலை இந்தியா உன்னிப்பாக அவதானித்து வருகின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது. இலங்கையில் உருவாகப்போகும் புதிய அரசாங்கம் தனது மூலோபாய நலன்களை
பாதுகாக்கவேண்டும்,இலங்கைக்குள் சீனாவின் எந்த கடல்கலத்தையும் நீர்மூழ்கியையும் அனுமதிக்க கூடாது என இந்தியா எதிர்பார்க்கின்றது என அந்த இணையத்தளம் தெரிவித்துள்ளது.
இந்தியா இலங்கையின் நலன்கள் குறித்து உணர்வுபூர்வமாக உள்ளதுடன் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் எவருடனும் இணைந்து செயற்படும் என இந்த விவகாரங்களை நன்கு அறிந்த ஒருவர் தெரிவித்துள்ளார்
என இணையத்தளம் குறிப்பிட்டுள்ளது. இலங்கையின் எந்த புதிய ஆட்சியாளரும் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களை பாதுகாக்கவேண்டும் எனவும் அவர்தெரிவித்துள்ளார்.