டெல்லி காற்றில் பாகிஸ்தான் விஷம் கலந்துள்ளது! பாஜக சந்தேகம்;

ஆசிரியர் - Admin
டெல்லி காற்றில் பாகிஸ்தான் விஷம் கலந்துள்ளது! பாஜக சந்தேகம்;

இந்தியத் தலைநகர் டில்லி  மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகள் அனைத்தும் கடுமையான காற்று மாசால் பாதிக்கபட்டுள்ளது. இந்நிலையில், டெல்லி அரசு காற்று மாசை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. 

தேசிய தலைநகர் பிராந்தியத்திலும், அதை சுற்றியுள்ள பகுதிகளிலும் அதிக அளவு மாசுபடுவதற்கு பாகிஸ்தான் மற்றும் சீனா மீது குற்றம் சாட்டப்பட வேண்டும் என்றும், இரு அண்டை நாடுகளில் ஒன்று இந்தியாவுக்கு விஷ வாயுக்களை விடுவித்திருக்கலாம் என்றும் பாஜக பாஜக மூத்த தலைவர் வினீத் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா பொறுப்பேற்றதிலிருந்து பாகிஸ்தான் விரக்தியடைந்துள்ளதாகவும், எந்தவொரு போரிலும் ஒரு வெற்றியைப் பதிவு செய்ய முடியாததால் இந்தியாவுக்கு எதிரான அனைத்து வகையான தந்திரோபாயங்களையும் மேற்கொண்டு வருவதாகவும் ஷர்தா கூறினார். 

இதனால் விரக்தியடைந்த பாகிஸ்தான், இந்தியாவில் விஷ வாயுவை வெளியிட்டுள்ளதா என்பதை நாங்கள் தீவிரமாக பரிசீலிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு