மீண்டும் லொறியில் அடைக்கப்பட்டிருந்த 31 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்பு..! இலங்கையர்களுமா?
பிரான்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் லொறி ஒன்றில் மறைந்து பயணித்த 31 சட்டவிரோத குடியேற்றவாசிகள் மீட்கப்பட்டுள்ளதுடன், லொறியின் சாரதியான பாகிஸ்த்தான் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்.
இத்தாலிய எல்லைக்கு அண்மையிலுள்ள வீதியில் மேற்கொள்ளப்பட்ட வழமையான பரிசோதனை நடவடிக்கையொன்றின் போது குறிப் பிட்ட லொறியில் உயிராபத்தான நிலையில் அந்தக் குடியேற்றவாசிகள் மறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த மாதம் பிரித்தானியாவில் குளிர்சாதன லொறியொன்றிலிருந்து 39 சட்டவிரோத குடியேற்றவாசிகள் குளிரில் விறைத்து சடலங்களாக மீட்கப்பட்டிருந்த நிலையில் மேற்படி குடியேற்றவாசிகளின் மீட்பு குறிப்பிடத்தக்கது.
உயிராபத்து மிக்க பயணம் என் பதை நன்கு உணர்ந்தும் சுபீட்சமான எதிர்கால வாழ்வை நாடி ஐரோப்பிய நாடுகளுக்கு அபாயமிக்க பயணத்தை மேற்கொள்ளும் முயற்சிகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அந்தக் குடியேற்றவாசிகளில் இரு இளவயதினர் குடிவரவு செயற் கிரமங்களுக்கு அமைய இத்தாலிய அதிகாரிகளிடம் கையளிக்கப்பட் டுள்ளனர்.