மீண்டும் இந்தியாவில் துயரம்..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor
மீண்டும் இந்தியாவில் துயரம்..! ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுமி உயிாிழப்பு..

இந்தியாவின் ஹாியானா மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 5 வயது சிறுமி உயிாிழந்த சிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். 

நேற்று வீட்டில் விளையாடி கொண்டிருந்தவர், திடீரென காணவில்லை. பெற்றோர் எல்லா இடங்களிலும் தேடினர். ஆயினும் அவர் கிடைக்கவில்லை.

பின்னர் கர்நாலில் உள்ள 50 அடி ஆழ்துளை கிணற்றில் சிறுமி விழுந்த விவகாரம் இரவு 9 மணிக்கு பெற்றோருக்கு தெரியவந்தது. 

இதையடுத்து தேசியபேரிடர் மீட்புக் குழுவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது.இதற்குள் உள்ளூர் மக்கள் ஆழ்துளை கிணற்றுக்கு பக்கத்தில் 

ஜே.சி.பி. இயந்திரம் கொண்டு பள்ளம் தோண்டி மீட்பு பணியில் ஈடுபட்டனர் சிறுமிக்கு ஒட்சிசன் வழங்கப்பட்டது.

எனினும் மீட்புபணி இடம்பெற்றபோதும் சிறுமி இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்துள்ளது.

Radio
×