பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தடையில்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்ட அறிவிப்பு

ஆசிரியர் - Editor2
பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தடையில்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்ட அறிவிப்பு
பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தடையில்லை- உச்சநீதிமன்றம் திட்டவட்ட அறிவிப்பு

பத்மாவதி திரைப்படத்தை வெளியிட தடையில்லை என்று உச்சநீதிமன்றம் மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

தீர்ப்பை மாற்றக் கோரி ராஜஸ்தான், மத்தியப்பிரதேச மாநிலம் தாக்கல் செய்த மனுவை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

நீதிமன்றம் என ஒன்று இருப்பதை மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்’ என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறியுள்ளார்.

தணிக்கை வாரியம் அனுமதித்த படத்தை சட்டம் ஒழுங்கு காரணம் காட்டி தடை விதிக்க முடியாது என்றும் சட்டம் ஒழுங்கு பிரச்சனைகளை மாநில அரசுகள் தான் காக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்