உலகம் முழுவதும் சிறுவன் சுஜித்திற்காக பிராா்த்தனை..! 73 மணித்தியாலங்கள் கடந்தும் நீளும் மீட்பு போராட்டம்..
திருச்சி மாவட்டம் - நடுக்காட்டுபட்டி கிராமத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறு வனை மீட்கும் பணிகள் 73 மணித்தியாலங்கள் கடந்தும் நடைபெற்றுக் கொண்டிருக் கின்றது. தொடா்ந்தும் பக்கவாட்டில் குழிதோண்டும் நடவடிக்கைகள் நடக்கிறது.
ஆழ்துளை கிணற்றின் அருகே அதி நவீன நிலத்தை துளையிடும் 'ரிக்' இயந்திரத்தை கொண்டு குழி தோண்டப்பட்டது. கடின பாறைகள் இருந்ததால் தோண்டும் பணி தாமதமாகியது. இதுவரை 50 அடி வரை குழி தோண்டப்பட்ட நிலையில்,
60 அடிக்கு மேல் மண் இருப்பதாக கூறப்படுகிறது.ரிக் இயந்திரத்தை கொண்டு முதலில் 30 அடி மட்டுமே தோண்டப்பட்ட நிலையில் முதல் இயந்திரம் பழுதடைந்தது. இதனையடுத்து 2 ஆவது இயந்திரம் கொண்டுவரப்பட்டு,
சுஜித் விழுந்த ஆழ்துளை அருகே 3 மீற்றர் தூரத்தில் 2 ஆவது குழி தோண்டப்பட்டு வருகிறது. இயந்திரத்தில் பல் சக்கரத்தில் பழுது ஏற்பட்டது எனினும் பின்னர் பழுது சரி செய்யப்பட்டு, மீண்டும் துளையிடும் பணி ஆரம்பமாகியது.
குழந்தையை மீட்க தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.கடினமான பாறைகள் இருப்பதால் 2 ஆவது ரிக் இயந்திரத்தின் மூலமும் துளையிடும் பணி தாமதமாகியது. குழந்தையை பாதுகாப்பாக மீட்பதற்காக
பல்வேறு இடங்களில் பிரார்த்தனைகள் நடந்து வருகிறது. மீட்பு பணி நடைபெறும் இடத்தில் அவ்வபோது மழை பெய்வதால் பல இடையூறுகள் இருந்த போதிலும் மீட்பு பணி தொடர்ந்தும் இடம்பெற்று வருகின்றது.
தமிழக துணை முதல்வர் பன்னீர் செல்வம், போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வருவாய்துறை அமைச்சர் உதயகுமார் ஆகியோர் அங்கிருந்து தொடர்ந்து மீட்பு நடவடிக்கைகளை கண்காணித்து வருவதாகவும்
இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.