மீட்பு பணி தீவிரம்..! நேற்று மாலை 5 மணிக்கு பின் குழந்தையில் அசைவில்லை. 3ம் நாளாக தொடரும் உயிா் மீட்பு போராட்டம்.
தமிழகம்- திருச்சி மாவட்டத்தில் ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்த சிறுவனை மீ ட்கும் பணிகள் 3ம் நாளாக இன்றும் மிக உணா்வுபூா்வமான நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
திருச்சி மணப்பாறையில் உள்ள நடுக்காட்டில் சிக்கியிருக்கும் குழந்தை சுர்ஜித்தை காப்பாற்ற வேண்டும் என்பது தான் நாடு முழுவதும் எழுந்துள்ள கோரிக்கை. 42 மணி நேரத்தையும் கடந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன.
பிரத்யேக கருவி மூலம் துளையிடும் பணி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மீட்பு பணி நடைபெறும் இடத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவா் கூறுகையில்,
சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அரசினுடைய அனைத்து துறைகளையும் பயன்படுத்தியுள்ளோம். முதல்வரும், இங்கு நடைபெறும் நிகழ்வுகளை கவனித்து,
உத்தரவுகளை பிறப்பித்துக்கொண்டிருக்கிறார். வருவாய்த்துறை அமைச்சரும் உத்தரவுகளை பிறபித்துக்கொண்டிருக்கிறார்.மீட்பு பணிமீட்பு பணிகளத்தில் சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்,
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, மாவட்ட ஆட்சித்தலைவர் முழு நேரப்பணியில் உள்ளார். தீயணைப்பு மற்றும் மீட்புத்துறை அதிகாரி காந்திராஜனும் இருக்கிறார். தேசிய பேரிடர் மேலாண்மை மீட்புக்குழுவில்
40 பேரும், மாநில பேரிடர் மீட்பு குழுவில் 30 பேர் என மொத்தம் 70 பேர் இருக்கின்றனர். காவல்துறையும், வருவாய்துறையும் முழுமையாக களத்தில் இருக்கிறது. ரிக் இயந்திரம் கொண்டு சரியாக் 38 அடி ஆழம் சென்றுள்ளோம்.
ஒருமணிநேரத்துக்கு 2 மீட்டர் செல்லும் வலிமை வாய்ந்தது. 40 அடி வரை பாறைகள் இருப்பதால் சற்று கடுமையாக இருக்கிறது.``பண்டிகையை மறந்து குழந்தைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம்.
தாய் மற்றும் தந்தை உள்ளிட்டவர்களைச் சந்தித்து பேசியுள்ளோம்" இதற்கிடையில், மற்றொரு ரிக் இயந்திரமும் கொண்டுவரப்பட உள்ளது. தற்போது அது காரைக்குடி அருகே வந்துக்கொண்டிருக்கிறது.
அந்த இயந்திரம், இதைவிட 3 மடங்கு வலிமை வாயந்தது. சிறுவன் சிக்கிக்கொண்டிருக்கும் இடத்துக்கும், இயந்திரம் தோண்டும் இடத்துக்கும் 2 மீட்டர் இடைவெளித்தான் இருக்கிறது.
சூப்பர் ஃபாஸ்டில் துளையிட்டால் அதிர்வுகள் ஏற்படும். இதனால் கவனத்துடன் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். என்.எல்.டி. ஒ.என்.ஜி.சி என்.எல்.சி உள்ளிட்ட தொழில்நுட்ப குழு முகாமிட்டுள்ளனர்.
நேற்று அதிகாலை 5 மணிக்கு முன் குழந்தையின் அழுகுரல் கேட்டோம். பிறகு குழந்தையின் அசைவை நாங்கள் கேட்கவில்லை. தொடர்ந்து பிரணாவாயுவை செலுத்திக்கொண்டிருக்கிறோம்.
மீட்பு பணிமீட்பு பணிஆக்சிஜனை குழந்தை ஏற்றுக்கொள்கிறதா என்பது தெரியவில்லை. சிசிடிவில் குழந்தையின் கை தெரிகிறது அசைவில்லை. அண்ணா பல்கலைகழகத்தின் தொழில்நுட்ப குழு வந்தார்கள்.
அந்த குழு, ரோபாட்டிக் கேமிராவை அனுப்பினார்கள். அதில் குழந்தையின் கையில் வெப்பம் இருக்கிறது என்பதை கண்டறிந்தனர். குழந்தை மயக்கமடைந்த நிலையில் இருக்கலாம் என கூறியுள்ளனர்.
குழந்தையின் கைகள் ஏர்லாக் மூலம் பிடிக்கப்பட்டுள்ளது.பண்டிகையை மறந்து குழந்தைகளுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறோம். தாய் மற்றும் தந்தை உள்ளிட்டவர்களைச் சந்தித்து பேசியுள்ளோம்.
சிறிய துளையில் சிக்கியுள்ளதால் மீட்பது சவாலாக உள்ளது. நெடுஞ்சாலையில் இந்த இயந்திரத்தைக் கொண்டுவருவது சிரமம். இதை குக்கிராமத்தில் கொண்டுவருவது சற்று சிரமம். இதை ஒரு இடத்தில் நிறுவுவது,
புவியின் தன்மை உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, கவனமாக மேற்கொண்டு வருகிறோம். துளையிடக்கூடிய பணி நடந்துக்கொண்டிருக்கும் நிலையில், இனி குழந்தை கீழே செல்ல வாய்ப்பேயில்லை.
முதல்வர்கள் பேசிக்கொண்டிருக்கிறார். அரசு இயந்திரங்கள் முடுக்கிவிடபட்டுள்ளன” என்றார்.