புதிய கருவியின் மூலம் குழந்தை சுர்ஜீத்தை மீட்க முயற்சி..!
புதிய கருவியின் மூலம் குழந்தையை மீட்க முயற்சி நடைபெற்று வருகிறது. கை போன்ற கருவியை பயன்படுத்தி குழந்தையை மேலே எடுக்க நடவடிக்கை. தேசிய பேரிடர் மேலாண்மைக் குழுவினர் புதிய கருவியின் மூலம் குழந்தையை மீட்க முயற்சி. ஹைட்ராலிக் கருவி மூலம் குழந்தையை மீட்க முயற்சி. முதலில் கயிறு கட்டி தூக்க முயற்சித்தபோது அது பலனளிக்கவில்லை. இரண்டாவதாக மதுரை மணிகண்டனின் ரெஸ்கியூ ரோபோ மூலம் மீட்க முயற்சி நடைபெற்றது. மூன்றாவதாக வேறொரு கருவியின் மூலம் நடைபெற்ற மீட்பு முயற்சியும் பலனளிக்கவில்லை. இந்நிலையில், ஹைட்ராலிக் கருவியின் மூலம் மீட்பு முயற்சி நடைபெற்று வருகிறது.
20 அடிக்கு கீழே உள்ள ஆழ்துளைக் கிணற்றின் விட்டத்தை அளந்து, அதற்கேற்ப கருவி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஸ்னேக் பைட் எனப்படும் தொழில்நுட்பத்தின் மூலம் குழந்தையை மீட்க முயற்சி. சென்சார்கள் பொருத்தப்பட்ட ஹைட்ராலிக் கருவி மூலம் மீட்பு முயற்சி. கைபோன்ற கருவி மூலம் குழந்தையின் கையை கவ்வி மேலே இழுக்கும் முயற்சி. ஆழ்துளைக் கிணற்றுக்குள் மண் கொட்டியிருப்பதால் மீட்புப் பணியில் சவால். ஹைட்ராலிக் கருவி செல்வதை கண்காணிக்க சிறிய மானிட்டர்கள் உள்ளன.
ஹைட்ராலிக் கருவி ஆழ்துளைக் கிணற்றுக்குள் இறக்கப்பட்டது. தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படையினர் கூட்டாக மீட்புப் பணி. ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் 4 அங்குலம் மட்டுமே உள்ளதால் மீட்புப் பணி சவாலாக உள்ளது. ஆழ்துளைக் கிணற்றின் விட்டம் 6 அங்குலமாக இருந்திருந்தால் மீட்புப் பணி எளிதாக இருந்திருக்கும். மேகமூட்டமாக இருந்தபோதிலும் மழை பெய்யாததால் மீட்புப் பணிகளுக்கு இடையூறு இல்லை. நடுக்காட்டுப்பட்டியில் மழைக்கு வாய்ப்பில்லை என்று வானிலை ஆய்வு மையம் தகவல்.