SuperTopAds

மீண்டும் சர்ச்சையில் நித்தியானந்தா! ரஞ்சிதா மறுத்துவிட்டார் - கனடா பெண் அதிர்ச்சி தகவல்கள்;

ஆசிரியர் - Admin
மீண்டும் சர்ச்சையில் நித்தியானந்தா! ரஞ்சிதா மறுத்துவிட்டார் - கனடா பெண் அதிர்ச்சி தகவல்கள்;

கனடாவைச் சேர்ந்த சாரா ஸ்டீபனி, நித்யானந்தா போதனைகளால் ஈர்க்கப்பட்டு அவரது ஆசிரமத்தில் சில காலம் தங்கியிருந்தார். பிறகு ஆசிரமத்திலிருந்து விலகி தன் சொந்த நாடான கனடாவில் வசித்து வருகிறார். இவர் நித்யானந்தா ஆசிரமத்துக்கு வந்து துறவறம் மேற்கொண்ட போது ஸ்ரீ நித்தியா ஸ்வரூப்பா பிரியானந்தா என்ற பெயருடன் குருகுல ஆச்சார்யாவாகப் பணியாற்றி வந்துள்ளார்.

இந்நிலையில், சாரா ஸ்டீபனி ‘நித்யானந்தாவால் மூளைச் சலவை செய்யப்பட்ட நான், இப்போது அவரது ஆபத்தான கலாச்சாரத்தைப் பற்றி பேசுகிறேன்!’ என்ற தலைப்பில் முப்பது நிமிட வீடியோ ஒன்றை கடந்த 16ஆம் தேதி யூடியூப்பில் வெளியிட்டிருக்கிறார். அந்த வீடியோ சமீப நாட்களாக வைரலாகி வருகின்றது. அதில் நித்யானந்தா ஆசிரமத்தில் பல்வேறு வகையான கொடுமைகளுக்கு சிறுவர், சிறுமிகள் ஆளாவதாக தெரிவித்திருக்கிறார்.

இது தொடர்பாக அவர் வீடியோவில் கூறுகையில், “பெங்களூருவில் உள்ள நித்யானந்தாவின் பிடதி ஆசிரமத்தில் சில காலம் இருந்தேன். தான் தங்கியிருந்த அனைத்து நாட்களும் மிகச் சிறந்தது என நினைத்திருந்தேன், ஆனால் அவை அனைத்தும் பொய் எனப் பிறகு தான் தெரிந்துகொண்டேன்.

கடந்த வருடம் ஆகஸ்ட் மாதம், திருவனந்தபுரத்தில் உள்ள நித்யானந்தா ஆசிரமத்தில் உள்ள சிறுவர், சிறுமிகளுக்கு சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவது குறித்து சில நாட்கள் நான் கற்றுக்கொடுத்தேன். அங்கு சிறுவர்களும் சிறுமிகளும் தனித்தனியாக தங்க வைக்கப்பட்டனர். ஒருநாள் அதிகாலையில் அழுதுகொண்டிருந்த சிறுமியிடம் விசாரித்தபோது, அவர்கள் அற்புத ஆற்றல்களை வெளிப்படுத்தும்படி அடித்துத் துன்புறுத்தப்படுவதாகக் கூறினர்.

மேலும் அங்குள்ள மற்ற சிறுவர்கள், சிறுமியர்கள் ஆசிரமத்தில் உள்ளவர்களால் தாங்கள் அடித்து துன்புறுத்தப்படுகிறோம் என்றும், கழிவறைக்குச் செல்லக் கூட தங்களுக்கு அனுமதி இல்லை என்றும் இரும்பு கம்பிகள் நிறைந்த அறையில் தாங்கள் சிறை வைக்கப்பட்டுள்ளோம் என்றும் அந்த சிறுவர்கள் தன்னிடம் தெரிவித்தனர்.

அடித்துத் துன்புறுத்தப்படுவது குறித்து வெளியில் சொல்வது குரு துரோகம் என்று ஆசிரம சிறுவர், சிறுமிகள் மிரட்டப்படுகின்றனர். இது குறித்து நித்யானந்தாவின் முதன்மைச் சீடர்களில் ஒருவரான ரஞ்சிதாவிடம் புகார் தெரிவித்தேன். ஆனால், அதை அவர் மறுத்துவிட்டார்“ என்றார்.

நித்தியானந்தா பற்றிய உண்மைகளை தெரிந்து கொண்ட பின், சொந்த நாட்டுக்கே திரும்பி விட்டதாகத் சாரா தெரிவித்தார். ஆனால், நித்தியானந்தாவின் பெயருக்கும் புகழுக்கும் களங்கம் விளைவிக்கும் வகையில் இந்த வீடியோ வெளியிடப்பட்டுள்ளதாக, நித்தியானந்தா தரப்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.