தமிழகத்தில் பிரபல நகைகடை ஒன்றில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை..! அதே சினிமா பாணியில் கைது செய்தது பொலிஸ்..

ஆசிரியர் - Editor I
தமிழகத்தில் பிரபல நகைகடை ஒன்றில் சினிமா பாணியில் நடந்த கொள்ளை..! அதே சினிமா பாணியில் கைது செய்தது பொலிஸ்..

தமிழகத்தில் பிரபல நகைக்கடை ஒன்றில் சினிமா பாணியில் புகுந்த கொள்ளையா்கள் பெருமள வு நகைகளை கொள்ளையிட்டு சென்றபோதும் சில மணி நேரங்களில் கொள்ளையா்களை பொ லிஸாா் மடக்கி பிடித்திருக்கின்றனா். 

குறித்த நகைகடையானது திருச்சியிலுள்ள பஸ் தரிப்பிடத்திற்கு அருகில் உள்ளது. எப்போதும் பரபரப்பான இடத்தில் இருந்த கடையில் தான் இவ்வாறு துணிகர முகமூடிக்கொள்ளை இடம்பெற்றுள்ளது. நூற்றுக்கணக்கான ஊழியர்கள் 

பகல் நேரத்தில் கடமையில் இருந்தாலும், பகல், இரவு நேரங்களில் பல காவலாளிகள் கடமையில் இருந்துள்ளனர். குறிப்பாக இரவு நேரத்தில் குறைந்தது 6 பேர் தினமும் காவல் பணியில் ஈடுபட்டிருந்துள்ளனர்.

கடையின் பின்புறம் ஏசி இயந்திரங்கள் பொருத்தப்பட்டிருந்த பகுதியில் பகல் ஆள் நடமாட்டம் குறைவாக காணப்பட்டுள்ளது. அதனால் இதை நன்றாக கண்காணித்த கொள்ளையர்கள் ஏசி இயந்திரங்கள் இருக்கும் சுவர் வழியாக துளையிட்டு 

நகைக் கடையின் உள்ளே கொள்ளையர்கள் குதித்துள்ளனர். சுவர் வழியாக உள்நுழைவதற்கு சுவரில் 2 அடிக்கு விசாலமாக துளையையிட்டுள்ளதனால் கொள்ளையர்கள் இந்த கொள்ளையை ஒரே நாளில் மேற்கொண்டிருக்க வாய்ப்பில்லையெனவும், 

இவ்வளவு பெரிய துளை போட நேரம்பிடிக்கும், துளை போட்டாலும் சத்தம் கேட்கவே செய்யும். அதனால் திட்டம் போட்டு சிறிதுசிறிதாகத்தான் திருடர்கள் துளையை போட்டிருக்கலாம் எனவும் சந்தேகிகம் எழுந்திருந்தது.

இந்த நகைக்கடையை சுற்றி 60 க்கும் மேற்பட்ட சிசிரிவி கெமராக்கள் இருந்தாலும், இரு கொள்யைர்களின் உருவம் மட்டுமே பதிவாகி உள்ளது.உள்ளே குதித்து வந்தது இருவர் என்றாலும், வெளியில் பலர் இந்த கொள்ளைக்கு உதவி இருக்கலாம் 

என்ற சந்தேகம் ஆரம்ப கட்ட விசாரணையில் பொலிஸாருக்கு எழுந்துளளது. ஏனென்றால், 100 கிலோ நகைகளை வெறும் 2 பேர் கொண்டு செல்ல முடியாது. இதைத் தவிர காவலாளர்கள் மீதும் சந்தேகம் எழுந்திருந்தது. 

இந்நிலையில், சந்தேகத்தின் பேரில் 6 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் கைரேகையோ, தடயங்கலோ கிடைக்கவில்லை. இந்நிலையில் இவ்வாறு நகைக்கடையில் கொள்ளையிட்டவர்கள் சுமார் 8 பேர் என்று தெரியவந்துள்ளது. 

மிகவும் சவாலான கொள்ளைச் சம்பவத்தையடுத்து 48 மணி நேரத்துக்குள் முதல் குற்றவாளியை பொலிஸார் கைதுசெய்துள்ளனர். இந்நிலையில், திருச்சியில் இருந்து பிற மாவட்டங்களுக்கும் தப்பி சென்றிருக்கலாம் என்ற சந்தேகத்தில் தீவிர தேடுதல் வேட்டைஇடம்பெற்றது.

நேற்றி இரவு 8.30 மணிக்கு வாகன சோதனையில் ஈடுப்பட்ட பொலிசாரை கண்டதும் கொள்ளையர்கள் மோட்டார் சைக்கிளை வேகமாக செலுத்தியுள்ளனர். உடனடியாக சந்தேகம் கொண்ட பொலிஸார் அந்த வண்டியை பொலிஸார் விரட்டத்த தொடங்கினர். 

கிட்டத்தட்ட ஒரு கிலோ மீற்றர் தூரத்துக்கு துரத்தி அவர்களை பிடித்தனர்.மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்ட நிலையில் அவருடன் வந்தவர் தப்பிச்சென்றுள்ளார்.இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபரிடமிருந்த 

பெட்டியொன்றுக்குள் இருந்து 5 கிலோ தங்க நகைகளை பொலிஸார் மீட்டுள்ளனர். அதனை சோதனை செய்ததில் குறித்த நகைகள் திருச்சி நகைக்படையில் கொள்ளையிடப்பட்ட நகைகள் என தெரியவந்துள்ளது.

கைதுசெய்த கொள்ளையர்களில் ஒருவரை உடனடியாக திருவாரூரில் இருந்து திருச்சிக்கு பொலிஸார் கொண்டு சென்றனர். இந்நிலையில் கைதுசெய்யப்பட் கொள்ளையரிடம் விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார், 

கொள்ளையில் 8 பேரின் தொடர்பிருந்ததாகவும் கொள்ளையிடப்பட்ட நகைகளை ஆளுக்கு 5 கிலோ தங்கம் வீதம் பிரித்து கொள்வது திட்டம் எனவும் தெரியவந்தது. கையில் இருக்கும் 5 கிலோ தங்க நகைகள் தவிர மீதமுள்ள நகைகளை சீராதோப்பில்

உள்ள தனது நண்பர்கள், உறவினர்களிடம் கொடுத்து வைத்திருப்பதாக கைதுசெய்யப்பட்ட நபர் தெரிவித்துள்ளார்.இதையடுத்து சீராதோப்பில் 50 க்கும் மேற்பட்ட பொலிசார் குவிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

காரைநகரில் உற்பத்தியான படகினால் தமிழர்களுக்கு என்ன நன்மை? சீநோரும் எதிர்காலத்தில் பறிபோகலாம்!

மேலும் சங்கதிக்கு