கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

தமிழீழ விடுதலை புலிகளை ஒட்டுமொத்த வல்லரசுகளும் கங்கணம் கட்டி அழிக்க காரணம் இதுவே..! அமொிக்க ஆய்வாளாின் அதிா்ச்சி தகவல்.

ஆசிரியர் - Editor
தமிழீழ விடுதலை புலிகளை ஒட்டுமொத்த வல்லரசுகளும் கங்கணம் கட்டி அழிக்க காரணம் இதுவே..! அமொிக்க ஆய்வாளாின் அதிா்ச்சி தகவல்.

தமிழீழ விடுதலை புலிகளை சா்வதேச நாடுகள் ஒன்றிணைந்து அழித்தமைக்கு காரணம் விடுத லை புலிகளிடம் இருந்த தொழிநுட்ப வளா்ச்சியும் போா் உபகரணங்கள் உற்பத்தில் கண்ட வளா் ச்சியுமே என அமொிக்க ஆய்வாளா் சேதுசபாா் சுட்டிக்காட்டியிருக்கின்றாா். அவா் வெளியிட்டு ள்ள கட்டுரையின் முழுமை இங்கு பிரசுாிக்கப்படுகின்றது. 

சந்திராயன் 2 குறித்து ஒரு பக்கம் கேலியும் மறுபக்கம் வாழ்த்துக்களுமாகச் சமூக வலைத் தளங்கள் கலவையாகக் காட்சியளிக்கிறது. நாம் அதற்குள் போக வேண்டாம்.நாம் அறிவியலுக்கும் புலிகளுக்குமான தொடர்புகளைக் கொஞ்சம் வரலாற்றில் பின்னோக்கிப் போய்ப் பார்ப்போம். திருகோணமலைதான் தமிழீழத்தின் தலைநகரம். 

திருகோணமலையை நிர்வாகத் தலைநகராகவும் யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களை கலாசாரத் தலைநகர்களாகவும் வன்னிப் பிரதேசத்தை கைத்தொழில் துறைத் தலைநகராகவும் கொண்டு தமிழீழத்தைக் கட்டியெழுப்பப் புலிகள் திட்டமிட்டிருந்தனர்.அந்த வகையில் தான் வன்னியை மையப்படுத்தி அறிவியல் நகரை வடிவமைத்தனர்.

கிளிநொச்சி மற்றும் மாங்குளம் ஆகிய பெருநகர்களுக்கிடையில் இந்த அறிவியல் நகர் தமிழீழத் தனியரசின் திட்டமாக முழு வடிவம் பெற்றது.இந்த அடிப்படையில் மல்லாவிப் பகுதியில் தமிழீழ விண்வெளி ஆய்வு மையத்திற்கு இடம் ஒதுக்கப்பட்டது.

விடுதலைப் புலிகளின் தலைவரின் தூர நோக்கும் முழு செயல் வடிவமும் இது

இதை சமாதான காலத்தில் புலிகளினுடைய உரையாடல்கள் திட்டமிடல்களினூடாக உலகம் அறிந்து பிரமித்தது மட்டுமல்ல அச்சமும் கொண்டதன் விளைவே தமிழீழ நடைமுறை அரச தமிழின அழிப்பில் தம்மைப் பங்காளிகளாக்கிக் கொண்டன.இண்றைய நில ஆக்கிரமிப்பும் அத்து மீறிய சிங்களக் குடியேற்றங்களும் தமிழீழ நடைமுறை அரசின் 

முன்னைய நிர்வாக அடுக்குகளை இலக்கு வைத்து அதைக் குலைப்பது போல் நிகழ்வதை உன்னிப்பாக அவதானித்தால் புரியும்.இதை முன்பு வடிவமைத்துக் கொடுத்ததே பிராந்திய மேற்குலகக் கூட்டணிகள் தான்.

தற்போது நீலிக் கண்ணீர் வடிக்கிறார்கள்

புலிகளின் படைத்துறை ஆளுமை பீதி ஏற்படுத்தியதை விட அவர்களின் அறிவியல் ஆளுமையும் பரிணாமத்திற்கு ஏற்ற வகையில் எதையும் விரைவாகக் கற்றுக் கொள்ளும் உத்தியும்தான் இவர்களைப் பீதியடைய வைத்தது. 

இந்த அடிப்படையில்தான்

தமிழீழம் உருவாகினால் அது இஸ்ரேலின் வரலாற்றைப் பின்னோக்கித் தள்ளியிருக்கும் என்பது புலிகளை முறையாக ஆய்வு செய்தவர்களின் மதிப்பீடு.அமெரிக்காவைச் சேர்ந்த ஆய்வாளர் சேதுசபார் ஒரு முறை குறிப்பிட்டது போல் புலிகள் இன்று இருந்திருந்தால் அவர்களின் கற்கும் வேகத்திற்கும் பரிணாம உத்திக்கும் ஒரு செயற்கைக் கோளைக்கூட 

விண்ணில் ஏவியிருப்பார்கள். அறிவியலில் கற்பனைக்கெட்டாத சாதனைகளையும் அறிவையும் கொண்ட முதலும் கடைசியுமான ஒரே ஒரு விடுதலைப் போராட்ட இயக்கம் புலிகள்தான்.இதனாலேயே புலிகளை அழிக்கத் துணை நின்ற இந்தியா சந்திராயன் 2 ஐ ஏவுவதில் தோல்வியுற்று நிற்கிறது.

பலருக்கு தெரியாத ஒரு கதை இருக்கிறது

பல் குழல் எறிகணகளை முதன் முதலில் புலிகள்தான் பாவித்தார்கள். அதன் பிறகே அதையும் விட பல குழல்கள் உள்ள எறிகணைச் செலுத்திகளை பிராந்திய மேற்குலக வல்லரசுகள் சிங்களத்திற்குக் கொடுத்தது மட்டுமல்ல புலிகளுக்கு எறிகணைகள் கிடைக்காமல் கடல் வழி வழங்கல் பாதையையும் தடை செய்தன.

புலிகள் அதற்கு மாற்று வழி தேடுவதற்குள் அதற்கு சந்தர்ப்பம் வழங்காமல் அழிக்கப்பட்டார்கள். சந்தர்ப்பம் வழங்கினால் அதை விட வேகமாக மாற்று யுக்திகளுடன் வருவார்கள் என்பதை மேற்குலகம் கணித்தே வைத்திருந்தது. கடைசி வரை யுத்த நிறுத்தம் ஒன்றிற்கு வாய்ப்பளிக்காததற்கு இதுதான் காரணம்.

புலிகளின் பாணி என்பதே ஆயுதங்களை அப்படியே பயன்படுத்தாமல் தமது வசதிக்கு ஏற்றமாதிரி மாற்றி அமைத்தே பயன்படுத்துவார்கள். எதிரிக்கு இது தலையிடி.குறிப்பாக கடற்புலிகள் வடிவமைத்த சண்டைப் படகு இஸ்ரேலின் டோராப் படகுகளுக்கு சவால் விட்டது மட்டுமல்ல அதைத் தோற்கடிக்கவும் செய்தன.

கடலில் கடைசி வரை கடற் புலிகளை வெல்ல முடியவில்லை. இறுதியில் வான் வழியாக தாக்குதல் நடத்தியே கடற்புலிகளை முடக்கினர்.அதுவும் வான் புலிகளை அறிமுகம் செய்த விடுதலைப் புலிகளின் தலைவர் அவற்றை வான் வழி யுத்த விமானங்களாக மாற்றி கடற்புலிகளுக்கான வான்வழி சூட்டாதரவை வழங்க முற்பட்டபோதுதான் 

முழு உலகமும் அதிர்ச்சியில் உறைந்து போய் என்ன விலை கொடுத்தாவது புலிகளை அழிப்பதென்று முடிவுக்கு வந்து சிங்களத்திற்கு உதவினார்கள். புலிகளின் காலம் என்பது தமிழர் வரலாற்றில் மட்டுமல்ல உலக வரலாற்றிலேயே ஒரு பிரளயம்.அதை என்றாவது ஒரு நாள் இந்த உலகம் ஏற்றுக் கொள்ளும்.அது வெகு தூரத்தில் இல்லை.

Radio
×