தமிழீழ விடுதலை புலிகள் தேற்கடிக்கப்பட்ட நாள் மிக முக்கியமான நாளாம்..! கோட்டா முன்னலையில் வாங்கின காசுக்கு மேலதிகமாக கூவிய முரளீதரன்..

ஆசிரியர் - Editor I
தமிழீழ விடுதலை புலிகள் தேற்கடிக்கப்பட்ட நாள் மிக முக்கியமான நாளாம்..! கோட்டா முன்னலையில் வாங்கின காசுக்கு மேலதிகமாக கூவிய முரளீதரன்..

தமிழீழ விடுதலை புலிகள் அழிக்கப்பட்ட நாளே தன்னுடைய வாழ்வில் முக்கியமான நாள் என கூறியிருக்கும் முத்தையா முரளீதரன் தமிழீழ விடுதலை புலிகள் கிடைத்த வாய்ப்புக்களை தவறவிட்டனா், மக்களை கொலை செய்தனா் எனவும் கூறியுள்ளாா். 

பொதுஜனபெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்சவின் கொழும்பு நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ள முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளீதரன் இலங்கையை அரசியல் அனுபவமிக்க அரசியல்வாதி 

ஒருவரே ஆட்சிசெய்யவேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளார்.தொடர்ந்தும் இந்த நிகழ்வில் உரையாற்றிய அவர், 2009 இல் யுத்தம் முடிவிற்கு வந்த விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்ட நாளே தனது வாழ்க்கையின் மிக முக்கியமான நாள் 

குறிப்பாக “அச்சம் என்பது பெரும் விடயம், நாங்கள் அச்சத்தில் பிடியின் வாழ்ந்துள்ளோம், 1977 இல் ஆட்சி மாற்றத்தின் பின்னர் எங்கள் வீடுகள் அழிக்கப்பட்ட அனைத்து அழிக்கப்பட்டன எனது தந்தை தாக்கப்பட்டார். அனைவரும் இந்தியாவிற்கு சென்றனர் 

ஆனால் நாங்கள் செல்லவில்லை நாங்கள் இங்கு வாழவிரும்பினோம் நான் இலங்கையன். இரு தரப்பும் தவறிழைத்தன,ஒரு கட்டத்தில் அரசாங்கம் தவறிழைத்தது பின்னர் விடுதலைப்புலிகள் தவறிழைத்தனர். 

அவர்கள் வாய்ப்புகளை தவறவிட்டனர். நாங்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தோம், நான் பெலவத்தையில் வசித்தவேளை எந்நேரமும் அரசியல்வாதியொருவர் தாக்கப்படலாம் என்ற அச்சத்தினால் நாடாளுமன்ற வீதியை பயன்படுத்துவதில்லை, 

கொழும்பும் அச்சத்துடனேயே வாழ்ந்தது. தமிழர்கள் அச்சத்துடனேயே வாழ்ந்தனர்.” எனவும் முரளீதரன் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் மக்களிற்கு யார் பாதுகாப்பு வழங்குவார் என்பதே இந்த தேர்தலில் முக்கியம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

அவ்வாறான தலைவரிற்கே தான் வாக்களிக்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அனுபவமிக்க அரசியல்வாதி ஒருவரே தெரிவு செய்யப்படவேண்டும் கிரிக்கெட் வீரர்களும் ஏனைய துறைசார் 

வல்லுனர்களும் நாட்டிற்கு தலைமை தாங்க முடியாது. இலங்கையில் சிலர் வர்த்தகர்கள் மீதும் ஏனையவர்கள் மீதும் நம்பிக்கை வைக்கின்றனர் ஆனால் மக்களின் பிரச்சினைகளை அரசியல் அனுபவம் உள்ள அரசியல் ரீதியில் முடிவெடுக்க கூடிய 

ஒருவராலேயே தீர்க்க முடியும். இலங்கையில் சில விடயங்களை சாதித்த மக்களை பாதுகாக்ககூடிய ஒருவரிற்கு மக்கள் வாக்களிக்கவேண்டும். முன்னுதாரணத்தின் மூலம் தலைமை தாங்குபவரே

 உண்மையான தலைவர் எனவும் முரளீதரன் தெரிவித்துள்ளார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு