கட்டணம் செலுத்தப்பட்ட விளம்பரம்

இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் - ஜனாதிபதி!

ஆசிரியர் - Admin
இஸ்ரோ விஞ்ஞானிகள் நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளனர் - ஜனாதிபதி!

சந்திரயான்-2 திட்டம் பின்னடைவை சந்தித்தாலும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு தலைவர்கள் பாராட்டுகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள செய்தியில் சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் முன் மாதிரியான அர்ப்பணிப்பையும், தைரியத்தையும் காட்டி உள்ளனர். இஸ்ரோ நாட்டுக்கு பெருமை தேடித்தந்துள்ளது. இதில் இன்னும் சிறப்பாக செயலாற்ற முடியும் என நாம் அனைவரும் நம்புகிறோம்.

மேலும் தலைவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள் விவரம்:- உள்துறை மந்திரி அமித்ஷா:- சந்திரயான்-2 திட்டத்தின் மூலம் இஸ்ரோவின் சாதனை ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை சேர்த்துள்ளது. இந்த திட்டத்துக்காக கடுமையாக, உறுதியாக உழைத்த இஸ்ரோ விஞ்ஞானிகளோடு இந்தியா துணை நிற்கிறது. எதிர்கால முயற்சிகளுக்கு எனது வாழ்த்துக்கள்.

பஞ்சாப் முதல்-மந்திரி அம்ரீந்தர்சிங்:- உங்களின் கடின உழைப்பை பற்றி நாங்கள் அனைவரும் அறிவோம். இதில், நாங்கள் பெருமை கொள்கிறோம். சந்திரயான் 2-வில் அடைந்த சாதனைகள் முன் மாதிரியாக இருக்கின்றன.

விக்ரம் லேண்டரின் தகவல் தொடர்பு மீண்டும் கிடைக்கும் என்று நாடு காத்து இருக்கிறது. டெல்லி முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால்:- இஸ்ரோ விஞ்ஞானிகளை நினைத்து நாங்கள் அனைவரும் பெருமை அடைகிறோம். அவர்கள் புதிய வரலாற்றை உருவாக்கி உள்ளனர். அவர்கள் மன முடைய தேவை இல்லை. விஞ்ஞானிகள் மிகப் பெரிய பணியை செய்து இருக்கிறார்கள். இவ்வாறு தலைவர்கள் கூறி உள்ளனர்.

Radio
×