SuperTopAds

வெடுக்குநாறி மலையை திருடுவதில் தொல்லியல் திணைக்களம் தீவிரம்..! பொலிஸாரை கொண்டு மக்களுக்கு நெருக்கடி..

ஆசிரியர் - Editor I
வெடுக்குநாறி மலையை திருடுவதில் தொல்லியல் திணைக்களம் தீவிரம்..! பொலிஸாரை கொண்டு மக்களுக்கு நெருக்கடி..

நெடுங்கேணி- ஆதி லிங்கேஸ்வரா் ஆலயத்தின் வருடாந்த திருவிழாவின்போது ஒலிபெருக்கிகள் பாவிப்பதற்கு தொல்லியல் திணைக்களத்தின் அறிக்கையை பெற்று சமா்பிக்குமாறு கூறும் பொலிஸாா் ஒலிபெருக்கி பாவனைக்கு தடைவிதித்துள்ளனா். 

நெடுங்கேணியில் அமைந்துள்ள ஆதிலிங்கேஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாட்டுக்கு தொடர்ந்தும் தடையாக இருக்கும் தொல்லியல் திணைக்களத்தினர் தற்போது ஆலயத்தின் வருடாந்த உற்சவம் பத்து நாட்களைக் கொண்ட திருவிழாக்களின் போதும் 

பல இடையூறுகளை ஏற்படுத்துவதாகவே அப்பகுதி மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். குறிப்பாக நேற்றைய தினம் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவம் ஆரம்பமாகிய நிலையில் பத்து தினங்கள் இடம்பெறும் குறித்த உற்சவத்தின்போது ஒலி வருகைக்காக 

நெடுங்கேணி போலீசாரை ஆலய நிர்வாகத்தினர் நாடி உள்ளனர். இருப்பினும் குறித்த ஆலயத்தில் ஒலிபெருக்கி பயன்பாடு மேற்கொள்ள அதற்கான அனுமதியை வழங்குவதானால் தொல்லியல் திணைக்களத்தின் அனுமதி கடிதத்தை சமர்ப்பித்தால் மட்டுமே 

ஒலிபெருக்கி அதற்கான அனுமதியை வழங்க முடியும் என நெடுங்கேணி பொலிசார் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக குறித்த ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவம் எந்தவித ஒலிபெருக்கி பாவனை இன்று திருவிழா இடம்பெறுவதாக 

ஆலய நிர்வாகத்தைச் சேர்ந்த ஒருவர் கவலையுடன் தெரிவித்தார்.