யாழ்.ஈச்சமோட்டையில் நள்ளிரவு நடந்த பயங்கரம்..! இளைஞன் மீது வாள்வெட்டு, வீடுகள் மீதும் தாக்குதல்..

ஆசிரியர் - Editor I
யாழ்.ஈச்சமோட்டையில் நள்ளிரவு நடந்த பயங்கரம்..! இளைஞன் மீது வாள்வெட்டு, வீடுகள் மீதும் தாக்குதல்..

யாழ்.பாசையூா் மற்றும் ஈச்சமோட்டை பகுதிகளில் வீடுகளுக்குள் புகுந்த வாள்வெட்டு குழு இளைஞா் ஒருவா் மீது வாள்வெட்டு தாக்குதல் நடாத்தியுள்ளதுடன், வீட்டிலிருந்த பொருட்களை அடித்து நொருக்கிவிட்டு தப்பி சென்றிருக்கின்றது. 

இந்த சம்பவம் நேற்று இரவு இடம்பெற்றிருக்கின்றது. சம்பவத்தையடுத்து பொலிஸ் அவசர இலக்கத்திற்கு தகவல் வழங்க தொலைபேசி அழைப்பு மேற்கொண்டபோது, சிங்கள மொழியில் உரையாடிய பொலிஸார் நடவடிக்கை மேற்கொள்ளத் தவறியதாகவும், 

மக்கள் தெரிவித்துள்ளனர். பாசையூர் பகுதியைச் சேர்ந்த கெமி என்ற வாள்வெட்டுக்குழுவினர் ஈச்சமோட்டை பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் புகுந்து வீட்டில் இருந்த பொருட்களை வாளால் வெட்டிச் சேதப்படுத்தியுள்ளனர்.

அந்த வீட்டில் 6 பெண்கள் உட்பட 1 சிறுவனும் இருந்துள்ளார். என்ன காரணத்திற்காக என்று தெரியாமல் இருந்த வீட்டிற்காரர்கள் 1.30 மணியளவில் 119 என்ற இலக்கத்திற்கு தகவல் வழங்க பொலிஸாருக்கு தொலைபேசி அழைப்பினை மேற்கொண்ட போது, 

பொலிஸார் சிங்களத்தில் கதைத்துவிட்டு தொலைபேசியை துண்டித்துள்ளனர்.அதேநேரம், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாட்டிற்குச் சென்றபோது, அங்கு ஏன் இரவு அறிவிக்கவில்லை என்று கேட்டதுடன், 

முறைப்பாட்டாளர்களின் முறைப்பாட்டிற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளவில்லை என்றும் முறைப்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.முறைப்பாட்டாளர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் காத்திருப்பதாகவும், பொலிஸ் இதுவரையில் சம்பவ இடத்திற்குச் சென்று 

பார்வையிடவில்லை என்றும் முறைப்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.பாசையூர் பகுதியில் தற்போது உருவாகியுள்ள இந்த கெமி வாள்வெட்டுக் குழு அதேநேரம், இளைஞர் ஒருவரையும் வாளால் வெட்டியுள்ளது. வாள்வெட்டிற்கு இலக்காகிய இளைஞர் 

யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். புதிதாக உருவாகியுள்ள இந்த கெமி குழு கஞ்சா வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், இந்த குழுவிற்கும் பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதனால், பொலிஸார் அந்த குழு மீது நடவடிக்கை 

எடுக்க தயங்குவதாகவும் அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.இவ்வாறான வாள்வெட்டுச் சம்பவங்கள் இடம்பெற்ற பின்னர், ஒருவரின் உயிர் பிரிந்ததன் பின்னரே பொலிஸார் நடவடிக்கை எடுக்க முற்படுவதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளதுடன், 

முறைப்பாட்டிகுரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள தயங்குவதாகவும் பொது மக்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு