பலாலி இராணுவ முகாமில் துப்பாக்கி சூடு..! இராணுவ சிப்பாய் உயிாிழப்பு..

ஆசிரியர் - Editor I
பலாலி இராணுவ முகாமில் துப்பாக்கி சூடு..! இராணுவ சிப்பாய் உயிாிழப்பு..

யாழ்.பலாலி இராணுவ முகாமில் இராணுவ சிப்பாய் ஒருவா் கடமை நேரத்தில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துள்ளாா். 

இந்நிலையில் உயிரிழந்த இராணுவ வீரரின் சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பலாலி இராணுவம் மற்றும் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

உயிரிழந்த இராணுவ வீரரின் விபரங்கள் தொடர்பில் இது வரையில் எவ்வித தகவல்களும் வெளியிடப்படவில்லை.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு