யாழ்ப்பாணம் வருகிறாள் “ஸ்ரீதேவி” யாழ்.மக்களுக்கு புதிய புகைரத சேவை..!
யாழ்ப்பாணத்திற்கும்- கொழும்பும் இடையில் நாளை 5 வியாழக்கிழமை முதல் புதிய ரயில் சேவையொன்று ஆரம்பிக்கப்படுகின்றது.
இந்த ரயிலுக்கு ஸ்ரீதேவி என புதிய பெயரிடப்பட்டுள்ளது. முன்பு இந்த ரயில் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திலிருந்து வவுனியா வரை சேவையில் ஈடுபட்டது.
தற்போது காங்கேசன்துறை வரை நீடிக்கப்பட்டுள்ளது. உத்தரதேவி ரயில் போன்று S13 இந்தியாவில் இருந்து கொள்வனவு செய்யப்பட்ட ரயில் பயன்படுத்தப்படவுள்ளது.
ஸ்ரீதேவி ரயில் நேர விபரம்- கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து பி.ப 3.55PM இற்கு புறப்பட்டு யாழ்ப்பாண நிலையத்திற்கு இரவு 10 மணிக்கும்,
காங்கேசன்துறை புகையிரத நிலையத்திற்கு இரவு 10.16 PM இற்கு வந்தடையும். காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து அதிகாலை 3.45 AM இற்கு புறப்பட்டு,
யாழ்ப்பாணப் புகையிரத நிலையத்திலிருந்து அதிகாலை 4.05AM மணிக்கு ஆரம்பித்து கொழும்புக் கோட்டை புகையிரதநிலையத்தை மு.ப 10.24 AM இற்கு சென்றடையும்.
இதன்படி நாளை முதல் தினமும் கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்கும்மிடையில் ரயில் சேவை 7 ஆக அதிகரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.