11 மாணவா்கள் கடத்தல் வழக்கு இறுதிக்கட்டத்தில் பல்வேறு தடங்கல்..! மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை.

ஆசிரியர் - Editor I
11 மாணவா்கள் கடத்தல் வழக்கு இறுதிக்கட்டத்தில் பல்வேறு தடங்கல்..! மேலும் சிலரை கைது செய்ய நடவடிக்கை.

கொழும்பில் 5 மாணவா்கள் உள்ளிட்ட 11 போ் கடத்தப்பட்டு கப்பம் பெறப்பட்டதன் பின்னா் காணாமல்போக செய்யப்பட்ட சம்பவம் தொடா்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது. 

எனினும் இறுதிக் கட்ட விசா­ர­ணை­களை முன்­னெ­டுப்­பதில் பல்­வேறு தடங்­கல்கள் ஏற்­பட்­டுள்ள நிலையில் அவற்றை நிவர்த்தி செய்து விரை­வாக விசா­ர­ணை­களை நிறைவு செய்­யவும் மேலும் சிலரை கைது செய்­வது குறித்து 

சட்டமா அதி­பரின் ஆலோ­ச­னையைப் பெற்­றுக்­கொள்­ளவும் சி.ஐ.டி. நட­வ­டிக்கை எடுத்­துள்­ள­தாக பொலிஸ் தலை­மை­யக தக­வல்கள் தெரி­வித்­தன. குறிப்­பாக சி.சி.டி. எனும் கொழும்பு குற்­றத்­த­ டுப்புப் பிரிவின் அப்­போ­தைய பணிப்­பாளர் 

பிரதிப் பொலிஸ் மா அதிபர் அனுர சேன­நா­யக்­க­வுக்கு 2009 மே 27 ஆம் திகதி கிடைக்­கப்­பெற்ற உண்மை நிலை­மைகள் மறைக்­கப்­பட்­டது தொடர்­பி­லான முறைப்­பாட்டின் பின்­ன­ணியில் ஜனா­ தி­பதி சட்­டத்­த­ரணி சவேந்ர பெர்­ணான்டோ 

செயற்­பட்­டுள்­ள­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்ள தக­வலை மையப்­ப­டுத்தி இடம்­பெறும் விசா­ர­ ணைகள் தொடர்பில் சட்ட மா அதி­ப­ரிடம் தனி­யாக ஆலோ­ச­னைகள் கோரப்­பட்­டுள்­ளன. குறித்த ஜனா­தி­பதி சட்­டத்­த­ர­ணிக்கு 

பல முறை சி.ஐ.டி.யில் வாக்கு மூலம்­பெற அழைப்பு விடுக்­கப்­பட்டும் சமூ­க­ம­ளிக்­காமல் இருப்­ப­ தனால், நீதி­மன்றின் உத்­த­ரவு உள்­ளிட்ட அனைத்து விட­யங்­க­ளையும் இணைத்­த­தாக சி.ஐ.டி.யின் சமூக கொள்ளை விசா­ரணைப் பிரிவு 

பொறுப்­ப­தி­காரி நிஷாந்த சில்­வ­வினால் சட்ட மா அதி­ப­ருக்கு எழுத்து மூலம் அறி­விக்­கப்­பட்டு அவ்­வி­டயம் தொடர்­பி­லான ஆலோ­ச­னைகள் கோரப்­பட்­டுள்­ளன. இவ்­வா­றான பின்­ன­னியில் தற்­ போது இந்த விவ­கா­ரத்தில், 

கடத்­தல்­க­ளுக்கு பயன்­ப­டுத்­தப்­பட்ட வெள்ளை வேன் தொடர்பில் சில வாக்கு மூலங்கள் பதிவு செய்­யப்­பட்டு வருகின்றன. அவ்வாக்கு மூலங்கள் பதிவு செய்யப்பட்டதன் பின்னர் , வெளிப்படுத்தப்படும் தகவல்களை 

மையபப்டுத்தி அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் தீர்மானிக்கப்படவுள்ளது.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு