SuperTopAds

கிளிநொச்சி மாவட்டத்தில் 53 இடங்களில் மக்களின் காணிகளில் படைமுகாம்கள்..! சுட்டிக்காட்டினாா் சி.சிறீதரன்..

ஆசிரியர் - Editor I
கிளிநொச்சி மாவட்டத்தில் 53 இடங்களில் மக்களின் காணிகளில் படைமுகாம்கள்..! சுட்டிக்காட்டினாா் சி.சிறீதரன்..

கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் தற்போதும் மக்களின் நிலங்களில் 53 படை முகாம்கள் உள்ளதாக தமிழ்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் சுட்டிக்காட்டியுள்ளாா். 

போரிற்குப் பின்னர் மகிந்த ஒரு தொகுதி நிலம் விடுவித்தார். அதன் பின்பு மைத்திரிபால சிறிசேனா ஜனாதிபதியாக வந்த பின்பு ஒரு தொகுதி நிலம் விடுவித்து விட்டார். படை நிலைகள் குறைக்கப்பட்டு விட்டன என்றெல்லாம் கூறினாலும் 

இன்றும் கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் 53 படை முகாம்கள் உள்ளன. இது வடக்கு கிழக்கில் உள்ள ஒரு மாவட்டத்தின் நிலமை இதேபோன்றுதான் ஏனைய மாவட்டங்களின் நிலமையும் உள்ளது. யாழ்ப்பாண மாவட்டத்தில் எண்ணிக்கையில் 

இராணுவ முகாம் குறைவாகவாக காணப்பட்டாலும் கடற்படையினரின் முகாம்களே மிக அதிகமாகவுள்ளது. இராணுவ முகாம்கள் 24 காணப்படும் அதே நேரம் கடற்படையினரின் தளங்கள் 71 காணப்படுகின்றன. 

அதாவது குடாநாட்டின் கடல் எல்லை 210 கடல்மைல் நீளமாக உள்ள நிலையில் 71 கடற்படை முகாம் உள்ளது. அவ்வாறானால் 3 கடல்மைல் தூரத்திற்கு ஒரு கடற்படை முகாம் உள்ளது. இங்கே உள்ள அனைத்து கடற்படையினரின் 

கண்களையும் கட்டிவிட்டுத்தான் போதைப் பொருள் குடாநாட்டிற்குள் எடுத்து வரப்படுகின்றது. என்றார்.