யாழ்.பருத்துறையில் பெருமளவு வெடிபொருட்கள் மீட்பு..! ஜனாதிபதி வருகையுடன் இணைத்து விசாரணை தீவிரம்.
போா் காலத்தில் மறைத்துவைக்கப்பட்டதாக கூறப்படும் பெருமளவு ஆயுதங்கள் யாழ்.பருத்துறை பகுதியில் உள்ள அரச காணியில் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
பொலிஸ் அதிரடிப்படையால் மீட்கப்பட்டுள்ளன. 2005ம் ஆண்டு காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள கிளைமோர் குண்டு ஒன்று, 60 மில்லி மீற்றர் ரக 4 மோட்டார் ரவைகள்,
40 மில்லி மீற்றர் ரக கைக்குண்டு துவக்கி இரவைகள் 12 மற்றும் பெராலைட் மூன்றும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸ் அதிரடிப்படையின் ஊடக பிரிவு தெரிவித்தது.