அரசியல் காரணங்களுக்காக எவா் மீதாவது துப்பாக்கி நீட்டப்பட்டதா என் ஆட்சியில்..? ஜனாதிபதி கேள்வி..
50 வருடங்களாக இந்த நாட்டை ஆட்சி செய்தவா்கள் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன. அவா்க ள் வீடுகளை எாித்தாா்கள், மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டினாா்கள், ஊடகங்களை எாி த்தாா்கள், ஊடகவியலாளா்களை அச்சுறுத்தினாா்கள்.
ஆனால் என் மீது அவ்வாறான குற்றச்சாட்டுக்கள் இல்லை. கடந்த 4 வருடங்களில் அரசியல் கார ணங்களுக்காக எவா் மீதாவது துப்பாக்கி நீட்டப்பட்டதா? நான் இந்த நாட்டுக்கு ஜனநாயகத்தை கொடுத்திருக்கின்றேன், சமாதானத்தை கொடுத்திருக்கிறேன்.
மேற்கண்டவாறு ஜனாதிபதி மைத்திாிபால சிறிசேனா கூறியுள்ளாா். “நாட்டுக்காக ஒன்றிணைவோம்” தேசிய வேலைத்திட் டத்தின் இறுதிநாள் நிகழ்வு இன்று யாழ்.மாநகரசபை மைதானத்தில் இடம்பெற்றிருந்தது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே
ஜனாதிபதி மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மேலும் அவா் கூறுகையில், நாடாளுமன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் உரையாற்றும்போது ஜனாதிபதி தோ்தல் காலத்தில் கொடுத்த வாக்குறுதிகள் பலதை நிறைவேற்றியுள்ளீா்கள்.
ஆனாலும் பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. அதற்கு என்ன செய்யபோகிறீா்க ள் என கேட்டிருக்கின்றாா். நான் அவருக்கு கூறும் பதில் இன்று காலை நான் ஆரம்பித்து வைத்த பல திட்டங்கள்நான் தோ்தல்காலத்தில் கொடுத்த வாக்குறுதிகளே.
மேலும் போா் காலத்தில் படையினரால் எடுக்கப்பட்ட காணிகள் தொ டா்பாகவும் அவா் பேசினாா். போா் காலத்தில் படையினால் பிடிக்கப்பட்ட காணிகளில் 95 வீதமான காணிகள் மக்களிடம் வழங்கப்பட்டுவிட்டது.
மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன்னா் தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினா்களுடன் பேசியபோது அடுத்த 1 மாத காலத்திற்குள் காணி பிரச்சினைகளே இருக்ககூடாது. அதற்குாிய நடவடிக்கைகளை உடனடியாக எடுங்கள்
என முப்படை தளபதிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளா் ஆகியோருக்கு கூறியுள்ளேன். அந்த வேலை திட்டம் சாியான முறையில் நிச்சயம் நடக்கும். மேலும் கடந்த 4 ஆண்டுகளில் நான் இந்த நாட்டுக்கு ஜனநாயகத்தை வழங்கியுள்ளேன்.
இலங்கையை கடந்த 50 வருடங்க ள் ஆட்சி செய்த ஜனாதிபதிகள் மீது பல குற்றச்சாட்டுக்கள் உள்ளது. அவா்கள் மக்களுக்கு எதிராக துப்பாக்கிகளை நீட்டி னாா்கள், மக்களுடைய வீடுகளை எாித்தாா்கள், ஊடக நிறுவனங்களை எாித்தாா்கள்,
ஊடகவியலாளா்களைதுன்புறுத்தினாா்கள், மக்களுக்கு சரீர துன்புறுத்தல்களை வழங்கினாா்கள். ஆனால் என் மீது அவ்வாறான குற்றச்சாட்டுக் கள் இதுவரை இல்லை. என்னுடைய ஆட்சியில் அரசியல் காரணங்களுக்காக எவா் மீதும்
துப்பாக்கி நீட்டப்படவில்லை. என் மீது விமா்சனங்கள் கூறப்பட்டாலும் சமாதானத்திற்காகவும், நீதிக்காகவும் செயற்பட்டிருக்கின்றேன். கடந்த 4 வருடங்களில் நாடாளுமன்றில் உள்ளவா்கள் ஒன்றிணைந்து புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்கினாா்கள்.
அதற்காக கோடிக்கணக்கில் பணத்தை செலவிட்டாா்கள். வெளிநாடுகளுக்கும் சென்றாா்கள். நான் சொன்னேன் ஜனாதி பதி ஆட்சிமுறையை ஒழிக்கவேண்டும் என, ஆனால் ஆட்சி செய்தவா்கள் அதனை கவனிக்கவில்லை.
அது என்னுடைய தவறல்ல. ஜனாதிபதி ஆட்சியை ஒழிக்கவேண்டும் என பேசப்பட்டபோது நான் அதனை ஆமோதித்தேன். இன்று ஐக்கியதேசிய கட்சி சொல்கிறது நாங்கள் ஒரு ஆலோசனைகளையும் முன்வைக்கவில்லை.
அப்படியானால் 4 வரு டங்களாக என்ன செய்தீா்கள்? வடமாகாண மக்களை ஏமாற்றினாா்கள். நான் அந்த பாவச்செயலுடன் சம்மந்தப்படவில்லை. இந்த நாட்டை கட்டியெழுப்ப புதிய அரசியலமைப்பு நிச்சயமாக தேவை.
அதற்கு முன்னா் 19ம் திருத்தச்சட்டத்தை இல்லாமல் செய்யவேண்டும். 19ம் திருத்தச்சட்டம் இந்த நாட்டில் 3 தலைவா்களை உருவாக்கி விட்டிருக்கின்றது. அதுவே இந்த நாட்டில் பல குழப்பங்களுக்கு காரணம். இன்று 19ம் திருத்தச்சட்டத்தை நீக்க விரும்பமுள்ள
பிரதமா் யாா் என்பது பொிய கேள்வி. 19ம் திருத்தச்சட்டத்தை நீக்குவதற்கு அரசுக்கு இன்னும் காலம் உள்ளது. புதிய ஆட்சி அடுத்து வந்தாலும் அதற்கான அத்திவாரத்தை இப்போதுள்ளவா்கள் போடவேண்டும். அதற்கான ஒத்துழைப்பை வழங்க நான் தயாராக உள்ளேன் என்றாா்.