SuperTopAds

கன்னியா ஆக்கிரமிப்பு விவகாரம்..! நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கட்டளை..

ஆசிரியர் - Editor I
கன்னியா ஆக்கிரமிப்பு விவகாரம்..! நீதிபதி இளஞ்செழியன் வழங்கிய கட்டளை..

திருகோணமலை- கன்னியா ஆக்கிரமிப்பு தொடா்பில் வழங்கப்பட்ட இடைக்கால தடையுத்தரவி னை அக்டோபா் மாதம் 7ம் திகதிவரை நீடித்து திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா.இள ஞ்செழியன் உத்தரவிட்டிருக்கின்றாா். 

கன்னியா விவகாரம் தொடர்பிலான வழக்கின் வாதப்பிரதிவாதங்கள் தொடர்ச்சியாக ஒன்றரை மணித்தியாலம் இடம்பெற்றது. கடந்த ஜூலை மாதம் 19ஆம் திகதி திருகோணமலை சட்டத்தரணி பிரசாந்தினி உதயகுமார் இவ் வழக்கினை பதிவு செய்திருந்தார்.

இவ்வழக்கில் எதிர் மனுதாரர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட ஜெனரல் விகும் டி ஆப்று குறித்த இடைக்கால தடை உத்தரவுக்கான ஆட்சேபனையை தெரிவித்துள்ளார். அத்தோடு நீதிமன்றத்துக்கு குறித்த வழக்கை விசாரிப்பதற்கு நியாயாதிக்கம் இல்லை 

என தெரிவித்ததோடு, ஆட்சேபனையை தாக்கல் செய்வதற்காக ஒரு தவணையை தருமாறு கோரியிருந்தார்.அத்தோடு மனுதாரர் சார்பில் தோன்றிய ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் குறித்த ஆட்சேபனைக்கான எதிராட்சேபனை மற்றும் 

எதிர் சத்திய கூற்று ஆகியவற்றை சமர்ப்பிப்பதற்கு தவணை கோரியுள்ளார்.இதனையடுத்து, எதிர்வரும் அக்டோபர் 07ஆம் திகதி வரை இடைக்கால தடை உத்தரவினை நீடிக்குமாறு திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி இளஞ்செழியன் கட்டளையிட்டுள்ளார்.