24 மணி நேரத்தில் 4 விபத்துக்கள்..! 5 போ் பலி, 9 போ் படுகாயம்..
இலங்கையில் கடந்த 24 மணித்தியாலத்தில் இடம்பெற்ற 4 விபத்துக்களில் 5 போ் உயிாிழந்துள்ள துடன், 9 போ் படுகாயமடைந்துள்ளனா்.
கல்முணை , மாரவில ,மொணராகலை மற்றும் வீரகெடிய ஆகிய பகுதிகளில் கடந்த நேற்று புதன்கிழமை(28.08.2019) தொடக்கம் இன்று மதியம் வரை
இடம்பெற்ற வாகன விபத்துகளிலே இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்தது. இந்நிலையில்,
கல்முணை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சேனகுடியிருப்பு பகுதியின் நேற்றிரவு, இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின் கட்டுபாட்டை இழந்து
விபத்துக்கு உள்ளாகியதில், படுகாயமடைந்த நிலையில் கல்முணை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்தன் பின்னர் இருவரும் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்கள், 19 வயதுடைய அருளானந்தன் ஹரன் மற்றும் அதே பகுதியை சேர்ந்த 30 வயதுடைய கணேசன் தனுசியன் என தெரியவந்துள்ளது.
அதேவேளை, மாரவில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மாவில பகுதியில் நேற்று மாலை 4 .20 மணியளவில் இருவர் பயணித்த மோட்டார் சைக்கிள் ஓட்டுனரின்
கட்டுபாட்டை இழந்து மீன்சார தூணுடன் மோதி விபத்துக்குள்ளானதில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மோட்டார் சைக்கிளின் ஓட்டுனர் உயிரிழந்துள்ளார்.
மற்றுமொரு விபத்தாக, மொணராகலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மரகல மாளிகை வீதியில் நேற்று பிற்பகல் 1.30 மணியளவில் சாரதி உற்பட
10 பேர் பயணித்த கெப் வாகனம் வழுக்கிச் சென்று பள்ளத்தில் வீழ்ந்து இடம்பெற்ற விபத்தில் 8 பேர் காயமடைந்து சிறிகல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அனுமதிக்கப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 8 பேரில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மற்றைய 7 பேரும் சிகிச்சைப் பெற்று வருகிவதாகவும்,
வீரகெடிய வீதியில் நேற்று முற்பகல் 10 மணியளவில் மோட்டார் சைக்கிள் ஒன்று பாதைசாரி பெண்ணெருவர் மீது மோதி இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த பெண்
தங்கல்லை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த விபத்துகள் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமையும் குறிப்பிடதக்கது.