காணாமல்போனவா்கள் தொடா்பான தகவல் இறுதிவரை உங்களுக்கு கிடைக்காமல்போகலாம்..! சாலிய பீாிஸ் அதிா்ச்சி தகவல்.
காணாமல்போனவா்களை தேடும் உறவுகள் பலருக்கு சாகும்வரை உாிய பதில் கிடைக்காமல் போகலாம். மேற்கண்டவாறு காணாமல் ஆக்கப்பட்டவா்களின் உறவினா்களுக்கு காணாமல் போனோா் அலுவலகத்தின் தலைவா் சாலிய பீாிஸ் கூறியிருக்கின்றாா்.
காணாமல்போனவர்களின் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாட்டை காணமுடியவில்லை என தெரிவித்துள்ள அவர் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வு வழங்கவேண்டாம்
என வேண்டுகோள் விடுத்துள்ளார் கொழும்பில் இடம்பெற்று கண்ணண் அருணாச்சலத்தின் டென்ட் விவரணசித்திரம் மற்றும் ஸ்டீபன் சம்பியனின் புகைப்படக்கண்காட்சி ஆகியவற்றை காட்சிப்படுத்தும் நிகழ்வுகளில் கலந்துகொண்ட உரையாற்றுகையில்
சாலிய பீரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.அவர் மேலும் குறிப்பிட்டதாவது கடந்த வருடம் நான் சந்தித்த ஒரு பெண்மணியின் அனுபவங்கள் குறித்து குறிப்பிடவிரும்புகின்றேன்.1942 ம் ஆண்டு பிறந்த அந்த பெண்மணி 1983 இல் இடம்பெற்ற கலவரத்தினால்
பாதிக்கப்பட்டவர். கொழும்பு பம்பலப்பிட்டியில் உள்ள ஆலயத்திற்கு பூஜை வழிபாட்டிற்காக சென்ற கணவர் தீடிரென மூண்ட கலவரத்தில் சிக்கி காணாமல்போயுள்ளார்.அன்றைய நாளில் தான் சந்தித்த அனுபவங்களை அவர் என்னிடம் விபரித்தார்,
பொட்டு வைத்துகொண்டு பேருந்தில்பயணிப்பது எவ்வளவு அச்சம் மிகுந்ததாக காணப்பட்டது என்பதை அவர் தெரிவித்தார். அவரது கணவர் அதன் பின்னர் திரும்பிவரவில்லை, அவரிற்கு என்ன நடந்தது என்பது எவருக்கும் தெரியாது.
தற்போது அந்த பெண்மணிக்கு 76 வயது. அவரது கணவர் உயிருடன் இல்லை என்பதை அவர் மனதால் உணர்கின்றார், எனக்கு பணம் தேவையில்லை எனது மகள் துபாயில் வேலைபார்க்கின்றார் என தெரிவித்த அந்த பெண்மணி கணவர் உயிருடன் இல்லை
என்றால் நான் பொட்டைஅழித்துவிடுவேன் என தெரிவித்தார்.நான் சாவதற்கு முன்னர் எனது கணவருக்கு இறுதிமரியாதைகளை செய்ய விரும்புகின்றேன் எனவும் அவர் குறிப்பிட்டார். இதேவேளை இலங்கையில் பலர் காணாமல்போகச்செய்யப்பட்டனர்
என்பதை பலர் ஏற்றுக்கொள்ள மறுக்கி;ன்றனர்.சிங்கள ஊடகங்கள் கூட அதனை ஏற்க மறுக்கின்றன.இது குறித்து விவாதிக்கின்றன. காணாமல்போகச்செய்தல் இடம்பெற்றது என்பதை பலர் மறுக்கின்றனர் அல்லது அதனை நியாயப்படுத்துகின்றனர்.
சமூக ஊடகங்களில் இது குறித்து இடம்பெறும் விவாதங்களை அவதானித்து பாருங்கள்.அவை காணாமல்போகச்செய்யப்படுதலை ஊக்குவிக்கும் வகையில் காணப்படுகின்றன. நாட்டிற்கு விசுவாசமானவர்கள் காணமல்போகவில்லை விசுவாசமற்றவர்களே
காணாமல்போயுள்ளனர் என கருத்துக்கள் காணப்படுகின்றன. காணாமல்போன தங்கள் உறவுகள் குறித்து பதிலை எதிர்பார்த்திருக்கும் பலரிற்கு அவர்களது வாழ்நாளில் அவர்கள் எதிர்பார்த்திருக்கின்ற பதில் கிடைக்காமல் போகலாம்.
உலக நாடுகள் பலவற்றின் அனுபவம் அவ்வாறானதாக உள்ளது. காணாமல்போகச் செய்யப்பட்டவர்களை கண்டுபிடிப்பதற்கான முயற்சிகள் 1981 முதல் சைப்பிரசில் இடம்பெறுகின்றன, இன்றும் இடம்பெறுகின்றன.
எனினும் இந்த நிலையை எங்களால் மாற்றமுடியும்.இதேவேளை காணாமல்போனவர்கள் விவகாரத்திற்கு தீர்வை காண்பதற்கான அரசியல் உறுதிப்பாடு காணப்படவில்லை என்ற உண்மையை கவலையுடன் நான் தெரிவித்துக்கொள்கின்றேன்.
அரசியல்வாதிகள் இந்த விவகாரம் குறித்து அதிக அக்கறையை வெளியிடவேண்டும்.வெறுமனே வாய்வார்த்தைகள் மாத்திரம் போதாது. இந்த விடயத்திலேயே நாங்கள் பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளோம், இதற்கு என்னிடம் பதில் இல்லை.
மனித உரிமை குற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்களிற்கு பதவி உயர்வை வழங்ககூடாது, அவர்களிற்கு பதவி உயர்வை வழங்குவதற்கான நியாயப்படுத்தல்களை ஏற்றுக்கொள்ள முடியாது. நாங்கள் ஏற்கனவே இந்த பரிந்துரையை முன்வைத்திருந்தோம்
ஆனால் அதனை நடைமுறைப்படுத்தவில்லை.விசாரணைகளை மேற்கொள்வதற்கான அதிகாரிகள் எங்களிடம் இல்லை,நாங்கள்விசாரணைகளை முன்னெடுப்பதில் சிரமங்களை எதிர்கொண்டுள்ளோம்.