நிலங்களை, வளங்களை தின்றதுபோதும் முல்லைத்தீவில் பாாிய போராட்டம்..!
முல்லைத்தீவில் இராணுவத்தினர் மற்றும் கடற்படையினர் சுவிகரித்துள்ள தமது சொந்த காணிகளை விடுவிக்க கோரியம் இதனால் தமது பிரதான ஜீவனோபாஜமான மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து
முல்லைத்தீவில் போராட்டம் ஒன்று மீனவர் ஒத்துழைப்பு இயக்கத்தின் ஏற்பாட்டில், பொதுமக்களால் முல்லைத்தீவு மாவட்ட செயலகத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது
முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு- வட்டுவாகல்-முள்ளிவாய்க்கால் அளம்பில் செம்மலை புதுக்குடியிருப்பு உள்ளிட்ட பிரதேசங்களை சேர்ந்த மீணவ குடும்பங்கள் மற்றும் கேப்பாபுலவில் தமது நிலங்களை விடுவிக்குமாறுகோரி
தொடர் போராட்டத்தில் ஈடுபடும் மக்கள் உள்ளிடடோர் இந்த போராடடத்தில் ஈடுபட்டுள்ளனர். தேசிய பாதுகாப்பு என்னும் போர்வைக்குள் இராணுவத்தால் கையகப்படுத்தப்பட்ட மக்களின் பாரம்பரிய காணிகளில் இருந்து
இராணுவம் இதுவரை வெளியேராமல் இருப்பதே இப்போராட்டத்திற்கு காரணமாகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது. தமது சொந்த நிலங்களை இராணுவத்தினரிடமிருந்து மீள பெற்றுக்கொள்ளும் நோக்கில் மக்கள் தொடர்ச்சியாக பல்வேறு போராட்டங்களை முன்னெடுத்துவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இந்த போராடடத்தில் ஈடுபட மக்கள் ஜனநாயக அரசே ! சர்வதேசமே! தமிழ் மக்களின் ரத்த கண்ணீர் வெள்ளத்தின் நடுவே ஜனநாயக தேர்தலா? யாருக்கு தேர்தல்? ஜனநாயக அரசே!
நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்து விட்டுச்சென்ற எம் பூர்வீக வாழ்விடம் எமக்கு வேண்டும் ஜனநாயக அரசே! மக்கள் பிரதிநிதிகளே! ஆயிரம் நாட்களுக்கு மேல் போராடும் என் பூர்வீக வாழ்வின் முடிவு என்ன?
என்ற வாசகங்கள் எழுதப்பட்ட பதாதைகளை தாங்கியவாறும் வேண்டும் வேண்டும் எமது நிலம் எமக்கு வேண்டும் இராணுவமே வெளியேறு எமது கடல் வளம் எமக்கு வேண்டும் சுயமாக தொழில் செய்ய அனுமதி செய் உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை எழுப்பியவாறும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்
போராட்டத்தின் இறுதியில் மாவட்ட செயலாளரிடம் மகஜர் கையளிப்பதற்காக சென்றவர்களை மாவட்ட செயலக வாசலில் தடுத்து நிறுத்தப்பட்ட போது குறித்த இடத்திற்கு வருகை தந்த மேலதிக மாவட்ட செயலாளர் கோ.தனபாலசுந்தரம் சந்தித்து மகஜரை பெற்றுக்கொண்டார்.