கூட்டமைப்பை பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவிட்டு ஆளுநா் சுரேன் ராகவனுடன் பேச சொன்ன ஜனாதிபதி..! கேவலப்பட்டவா்கள் கண்டனம்.

ஆசிரியர் - Editor I
கூட்டமைப்பை பேச்சுவாா்த்தைக்கு அழைத்துவிட்டு ஆளுநா் சுரேன் ராகவனுடன் பேச சொன்ன ஜனாதிபதி..! கேவலப்பட்டவா்கள் கண்டனம்.

தமிழ்தேசிய கூட்டமைப்பினருடனான சந்திப்பிலிருந்து ஜனாதிபதி சடுதியாக எழுந்து சென்றமை தொடா்பில் தமிழ்தேசிய கூட்டமைப்பு கண்டனம் தொிவித்துள்ளது. 

ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை பகல் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சந்தித்துக் கலந்துரையாடினார்.

சுமார் ஒருமணிநேரம் இந்த சந்திப்பு இடம்பெற்ற போதிலும் பேச்சுவார்த்தை ஆரம்பமாகி சிறிது நேரத்தில் ஜனாதிபதி தனது ஆசனத்திலிருந்து எழுந்து சென்றமை 

கூட்டமைப்பினரது மனங்களில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனிடம் மேலதிக கலந்துரையாடலை நடத்துமாறு ஜனாதிபதி பணித்துவிட்டுச் 

சென்று பேச்சுவார்த்தையின் இறுதிநேரத்தில் மீண்டும் கலந்துகொண்டிருந்தார். இந்தப் பேச்சுவார்த்தைக்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற 

உறுப்பினர்களான சிவமோகன், மாவை சேனாதிராஜா, சாள்ஸ் நிர்மலநாதன், சிறிநேசன், கோடிஸ்வரன், சிறிதரன் மற்றும் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். 

ஆனால் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் ஆகியோர் இதில் கலந்துகொள்ளவில்லை.

இந்த சந்திப்பு தொடர்பாக எமது செய்திப் பிரிவுக்கு கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான சிவமோகன் கருத்து வெளியிட்டார்.

பேரம் பேசும் ஏமாற்று அரசியல் வேண்டாம் - திடசித்தத்துடன் முன்நகர்வோம் !

மேலும் சங்கதிக்கு