பலாலி விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள், கண்ணிவெடியகற்றும் பணிகள் புயல் வேகத்தில்..!
பலாலி விமான நிலையததிலிருந்து அக்டோபா் மாதம் 15ம் திகதி தொடக்கம் பிராந்திய விமான சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக பிரதமா் தலமையிலான கூட்டத்தில் தீா்மானிக்கப்பட்டிருக்கும் நிலையில் பலாலி விமான நிலையத்தின் அபிவிருத்தி பணிகள் மிக துாித கதியில் இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஒருபக்கம் விமான ஓடுபாதை அமைக்கும் பணிகளும் மறுபக்கம் விமான நிலையத்திற்கு தேவையான காணியில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுக் கொண்டிருப்பதை அவதானிக்க கூடியதாகவுள்ளது.
பிரதமா் ரணில் விக்கிரமசிங்க தலமையில் நேற்றய தினம் அலாி மாளிகையில் இடம்பெற்ற உயா்மட்ட கலந்துரையாடலில் அக்டோபா் மாதம் 15ம் திகதி பிராந்திய விமான சேவைகளை பலாலியில இருந்து தொடக்குவது என தீா்மானிக்கப்பட்டது.
மேலும் விமான நிலையத்திற்கான குடிநீா் இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கான தொழிநுட்ப சேவைகளை வழங்கும் நிலையம் அமைப்பது தொடா்பாகவும் ஆராயப்பட்டிருந்தது. இந்நிலையில் தற்போது விமான நிலையத்தின் புனரமைப்பு பணிகள்
மிக துாிதகதியில் இடம்பெற்றுக் கொணடிருக்கின்றது.